WORD OF GOD

WORD OF GOD

Friday, February 11, 2011

காலை மன்னா

அன்பான உடன் விசுவாசிகளுக்கு ஸ்தோத்திரங்கள், காலை நேர வாழ்த்துக்கள். இந்தக் காலையில் நாம் தியானத்திற்கென்று  தெரிந்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை 1 தீமோத்தேயு . 2 : 1 - 3 .

1. நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;

2. நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.

3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது
மனிதர்களாகிய நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறவர்கள் இன்னொருவருடைய  உதவி இல்லாமல்  எந்த மனிதனும் வாழ முடியாது. காரணம் நம்முடைய வாழ்க்கை முறை சமூக வாழ்க்கை முறையாகும்.

நம் வீட்டில், நம் தெருவில், சாலையில், நாம் பணிபுரியும் அலுவலகத்தில், நாம் சிறப்பாக செயலாற்ற எத்தனை பேருடைய உதவி தேவைப்படுகிறது, நாம் சாப்பிடுகிற ஒவ்வொரு வேளை உணவிலும் எத்தனை பேருடைய உழைப்பு இருக்கிறது,

ஏர் ஒட்டிய விவசாயி, களை எடுத்தவர்கள், அறுவடை செய்தவர்கள், அதை சுத்தம் செய்தவர்கள், வியாபாரிகள், இப்படி அநேகரின் உழைப்பில் தான் நாம் ஒருவேளை உணவை உட்கொள்ளுகிறோம்.

எனவே நம்முடைய தியானப்பகுதியில் பவுல் சொல்லுகிற ஒரு அறிவுரை என்னவென்றால் எல்லா மனுஷருக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் என்பதே, இது நான் சொல்லுகிற பிரதானமான அறிவுரை என்கிறார் , அதிலும் குறிப்பாக, நம்மேல் அதிகாரம் உள்ளவர்களுக்காக விண்ணப்பம் பண்ணுங்கள் என்கிறார்.

நம்முடைய அவசர உலகில் நமக்காக நாம் ஜெபம் செய்யவே நமக்கு நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம், ஆனால் எந்த காரணத்தைக்கொண்டும் நாம் ஜெபிக்கிற நேரத்தை விட்டுவிடக் கூடாது. நம் அதிகாரிகள், நம் அரசாங்கம் நன்மை  செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்,  அப்படியானால் அவர்களுக்காக, அவர்களுடைய மாற்றத்திற்காக ஜெபிக்க வேண்டியது அவசியம் அல்லவா.
எனவேதான் பவுல் தெளிவாக எல்லாருக்காகவும் ஜெபியுங்கள் என்று கூறுகிறார்.

அது மாத்திரமல்ல நாம் ஏன் அப்படி எல்லாருக்காக ஜெபிக்க வேண்டும் என்பதையும் கூறுகிறார் 2 வது  வசனத்தில், நாம் கலகமில்லாத, அமைதலுள்ள வாழ்க்கை வாழ நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்க சொல்லுகிறார்,

3 வசனத்தில், அப்படி ஜெபிப்பது இயேசுகிறிஸ்துவுக்கு முன் நமக்கு நன்மையும் , பிரியமுமாய் இருக்கிறது என்று கூறுகிறார், எனவே நாம் மற்றவர்களுக்காக ஜெபிப்பது அவர்களுக்கும் நமக்கும் நன்மையாக இருக்கிறதல்லவா?

எனவே முதலில் ஜெபிப்பதற்கென்று நேரத்தை ஒதுக்குவோம், நமக்காக மட்டுமல்ல எல்லா மனுஷருக்காகவும், நம்முடைய அதிகாரிகள் தலைவர்களுக்காகவும் ஜெபித்து சமாதானத்தையும், இயேசுகிறிஸ்துவின் பிரியத்தையும் பெற்று இந்த காலை முதல்  நிறைவாய் வாழ்வோம். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews