சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
சங்கீதம்.46 :11
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்
ஆண்டவராகிய இயேசுவின் பிள்ளைகளே. என் சகோதர சகோதரிகளே. உங்கள் யாவருக்கும் காலை வணக்கம்.
நாம் தனிமையை விரும்புவதில்லை, தனிமை என்பது, மிகப்பெரிய தண்டனையாகும். அதனால் தான் தவறு செய்பவர்களை அரசாங்கம் சிறையில் அடைத்து தனிமை அனுபவத்தை தருகிறது.
இங்கே சங்கீதக்காரன் தாவீதும் தனிமையில் இருக்கிறார்: மன வேதனை ஒருபுறம் இருந்தாலும், அவனுக்கு பயம் இல்லை, காரணம் சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார், என்று சோர்ந்துப்போய் இருக்கிற படைகளை பார்த்து சொல்லுகிறார்.
சவுல் அரசனுக்கு பயந்துப்போய் சோர்ந்துப்போய் இருக்கிறார்கள், அவர்களை தேற்றுகிறார். தேற்றுபவர் தலைவர், அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை கடவுள் மீது இருப்பதை பாருங்கள், நாம் தனிமையில் சோர்ந்துப்போய் இருக்கிற நேரத்திலும் பலவீனமான நேரத்திலும், கைவிடப்படுகிற நேரத்திலும், குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்கள் நம் மீது கோபம் கொண்டு பேசினாலும், தாக்கினாலும், ஏசினாலும், நமக்கு பயம் வேண்டாம்.
ஏன் என்றால் நம்மோடு இருக்கிற ஆண்டவர் (படைகளின்) சேனைகளின் கர்த்தர், வல்லமை உடையவர், பராக்கிரமம் உள்ள கர்த்தர், அனைத்தையும் அவர் பார்த்துகொள்வார்.
நாம் அவருடைய கோட்டைக்குள் இருக்கிறோம், அவரே நமக்கு அடைக்கலமும் பெலனுமானவர்.
அதிகாரவர்க்கம், அரசு, இந்த காண்கிற உலகம், இவை அனைத்தும் விரோதமாய் மாறினாலும் நாம் பயப்பட தேவையில்லை, கடவுள் நம்மோடு இருக்கிறார். தானியேல் புத்தகத்தில் நேபுகாத் நேச்சார் அரசன் (தானியேல்.3 :1 -30௦) சாதராக், மேஷாக், ஆபேத்நேகோ, என்ற மூன்று வாலிபர்களை தான் செய்த சிலையை வணங்கும்படி சொல்லுகிறான், ஆனால் இவர்களோ நாங்கள் எங்கள் கடவுளாகிய இஸ்ரவேலின் கடவுளை தவிர வேறு யாரையும் வணங்கமாட்டோம் என்கிறார்கள்.
அரசன் அவர்கள் மீது கோபம் கொண்டு எரிகிற அக்கினி சூளையில் போடுவேன் என்கிறான். ஆனால் இந்த வாலிபர்களோ சற்றும் பயப்படாமல் (தானியேல்.3 :17 ) நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராய் இருக்கிறார், அவர் எரிகிற அக்கினி சூளைக்கும் ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார் என்று சவால் விடுகின்றார்கள் .
ஆதலால், அன்பான ஆண்டவருடைய பிள்ளைகளே நாம் யாருக்கும் பயப்படாமல் தைரியமாய் இருப்போம் கடவுள் நம்மோடிருந்து, எல்லாரிடத்திலும் இருந்து நம்மை தப்புவிப்பார், சமாதானமாய், இந்த நாளை ஆரம்பியுங்கள், சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு, G .மில்டன் அருண்ராஜ்
revmilton1982@gmail.கம
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்
No comments:
Post a Comment