தப்புவிக்கிற இயேசு
சங்கீதம்.116 :8
8. என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும் என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.
என் அருமை ஆண்டவருடைய பிள்ளைகளே, மகிழ்ச்சியான இந்த புதிய மாதத்தில் உங்களை சந்திப்பதிலே ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன். கடந்த பிப்ரவரி மாதம் முழுவதும் நம்மை காத்து வழி நடத்தி ஆசீர்வதித்து வந்த ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.
இங்கே சங்கீதக்காரன் தாவீது, என் ஆத்துமாவை (உயிரை) மரணத்துக்கு தப்புவித்தீர் என்கிறார், மரணம், கண்ணீர், இடறல், துன்பம் இவற்றை எந்த ஒரு மனிதனும் விரும்புவதில்லை.
தாவீதின் வாழ்வில் அவர் மரணத்தை கண்டு பயப்படவில்லை, ஆனால், மரணத்தை ஒவ்வொரு நாளும் கடந்து வந்தார், மரணத்துக்குள் சென்று திரும்பி வந்தார். சவுல் அரசன், தாவீது மீது பொறாமை கொண்டு, கோபம் கொண்டு, சிறுபான்மையாக இருந்த அவனையும் அவன் ஆட்களையும் கொல்ல கோபத்தின் உச்ச நிலையில் இருக்கிறான். அதிகார வர்க்கம் சிறுபான்மையினரை அடக்கும் நிலை தொன்று தொட்டே இருந்து வருகிறது.
ஆனால் இயேசு ஆண்டவர் கூறுகிறார், பயப்படாதே சிறுமந்தையே நான் உங்களைப் பாதுகாத்து போஷித்து காப்பாற்றுகிறேன் என்கிறார். நாம் இந்த தேசத்தின் குடிமக்களாய் இருந்தும் நம்முடைய அங்கீகாரத்தை பெற போராடி வருகிறோம், அதுபோல சவுல் தாவீதை அங்கீகரிக்கவேயில்லை, ஆனால் தாவீது கடவுளால் தெரிந்தேடுக்கப்பட்டவன்.
கடவுளையே எதிர்க்கிற அளவுக்கு இன்று மனிதனின் போக்கு இருக்கிறது,
ஆனால் இயேசு ஆண்டவர், இப்படிப்பட்ட பலவிதமான பிரச்சனைகள், ஏழ்மை, இயலாமை இவற்றில் இருந்து நம்மை விடுவிக்கிறார்.
சங்கீதம்.91 :3 அவர் உன்னை வேடனுடைய கன்னிக்கும் பாழாக்கும் கொள்ளை நோய்க்கும், தப்புவிப்பார்.
நம்முடைய கண்ணீரை துடைக்கிறவர், "ஆகார்" பாலைவனத்தில் அனாதையாய் நின்ற பின்பு தனிமையில் கண்ணீரோடு ஜெபித்தாள், கடவுள் கண்ணீரைக் கண்டார், துடைத்தார். (ஆதி.16 )
எதிரிகள் நம்மை வீழ்த்தும்படி வலைப்பின்னி, சதி செய்கிறார்கள், கடவுள் அந்த இடரல்களிலிருந்து தப்புவிக்குறார். விழாதபடி தாங்குகிறார், இயேசு ஆண்டவர் தமது சிறகுகளால் நம்மை தாங்கும்படி செய்கிறார்.
நம்மை மீட்கும்படி தம் ஜீவனை விட்டவர் இயேசு இராஜா, இன்றும் இந்த புதிய மாதமாகிய மார்ச்சு மாதத்தில், நம் ஜீவனையும் மரணத்திலிருந்து காப்பார், கண்ணை கண்ணீருக்கு விலக்கி காப்பர், காலை இடறலுக்கு காப்பார்.
ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார், நம்மை தப்புவிப்பார்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment