அன்பான உடன் விசுவாசிகளே கடந்த பதினோராம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட உலகின் மூன்றாவது மிகப்பெரிய பூகம்பம், ஜப்பானை மட்டுமல்ல உலகத்திற்கே எச்சரிக்கை தந்திருக்கிறது, மனிதனுடைய மனிதாபிமானத்திற்கு இந்த பேரழிவு மீண்டும் ஒரு தேர்வு வைத்துள்ளது, ஜப்பானில் பூகம்பம் என்பதும் சுனாமியும் கூட அடிக்கடி நிகழக்கூடியது தான் ஆனால், இவ்வளவு பெரிய பூகம்பம் ஜப்பானுக்கே இதுதான் முதல் முறை.
அனேக நேரங்களில் இது போன்ற ஆபத்துக்களை காணும்போதெல்லாம் எங்கோ யாருக்கோ ஏற்படக்கூடியது நமக்கு வராது என்ற எண்ணம் நமக்கு இயல்பாக ஏற்பட்டு நம்மை நாம் தேற்றிக்கொள்வோம், ஜப்பானிய மக்களும், 11 ம் தேதி காலை 11 :15 வரை அப்படிதானே வாழ்ந்திருப்பார்கள், ஆனால் இந்த இயற்கை அங்கே கோரதாண்டவம் நடத்திவிட்டதே,
உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார சக்திக்கொண்ட நாடு, இன்று நிலைக்குலைந்து போயிருக்கிறது, அணு உலைகளிலிருந்து கதிர்வீச்சு கசிந்து உலகத்தையே அச்சத்தில் மூழ்கடித்திருக்கிறது, இன்றைக்கு அனைத்து உலக நாடுகளும் இதைப்பற்றி மிகவும் வேகமாக யோசித்து முடிவெடுக்க தொடங்கிவிட்டன. காரணம் அதன் வீரியம் நான்கு தலை முறைகளை பாதிக்கும்.
முதலாவது நாம் செய்ய வேண்டியது, வாழ்விழந்த மக்களின் வாழ்வுக்கு ஜெபத்தோடுக்கூடிய நம்மால் இயன்ற உதவிகளை தொண்டு நிறுவனங்கள் வழியாகவோ, அரசாங்கம் வழியாகவோ அர்ப்பணிப்போடு ஏறெடுப்போம்.இதெல்லாம் கேள்விப்படும்போது ஒரே ஒரு வசனம் தான் என்னை அச்சுறுத்துகிறது, மதிகேடனே இன்றிரவு உன் ஜீவன் போனால் என்கிற வசனம் எவ்வளவு பெரிய சத்தியம், எனவே நம்மை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். நம் வாழ்வு நிரந்தரமானதல்ல, நீடித்த நாட்கள் கொண்டதுமல்ல, ஏன் பகை? ஏன் மூர்க்கங்கள்? ஏன் பழிவாங்கல்? என்ன சாதிக்கபோகிறோம் இதனால் ? அடுத்தவனை ஏமாற்றி என்ன வாழ்ந்துவிடப்போகிறோம்? ஒரு கிராமமே காணாமல் போயிருக்கிறது, ஒரு நாடே ஸ்தம்பித்து போயிருக்கிறது, ஆயிரக்கணக்கான மக்களின் திட்டங்கள் கனவுகள் ஆசைகள் மண்ணாகிப் போயிருக்கிறது. நம்மில் இது மனிதாபிமான மாற்றத்தை தரவில்லை திணிக்கிறது, உணர்வோம் மனிதாபமுள்ள மனிதனாக மாற முடிவெடுப்போம்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment