WORD OF GOD

WORD OF GOD

Wednesday, March 9, 2011

சாம்பல் புதன்

இந்த நாளின் பிரசங்க வாக்கியம். யோவேல்.2 :12 -19 

12. ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

13. நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.

14. ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.

15. சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்.

16. ஜனத்தைக் கட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப்புறப்படுவார்களாக.

17. கர்த்தரின் பணிவிடைக்காராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.

18. அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.

19. கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதில் திருப்தியாவீர்கள்



நமதாண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் மிகவும் அதிகமாய் நேசிக்கப்படுகிற கடவுளுடைய பிள்ளைகளே, ஸ்தோத்திரம்.

நாம் மீண்டும் தவசு நாட்களுக்குள் பிரவேசித்து இருக்கிறோம், இன்றையிலிருந்து 40  நாட்கள் உபவாச நாட்களாக  கடைப்பிடிக்கபோகிறோம்.

மனந்திரும்புதலுக்கு அழைப்பு:

கடவுளிடமிருந்து தப்பித்துக் கொள்ள ஒரே வழி மனந்திரும்புதல், கடவுள் தண்டிக்கிறவர் அல்ல கண்டிக்கிறவர், எந்நாளும், தன பிள்ளைகள் நல்ல பிள்ளையாக வளர வேண்டும் என்ற தாய் போல் கரிசனையோடுள்ளார்.

இந்த பகுதி மனந்திரும்ப அழைப்புவிடுக்கிற பகுதி. இந்த அழைப்பு கடவுளின் மாபெரும் கிருபையை காட்டுகிறது, அவர் நம்மீது மனதுருக்கமுடையவர்.

வசனம்.13  ல் நீங்கள் உங்கள் உடைகளையல்ல, உங்கள் இருதயங்களை கிழித்து உங்கள் கடவுளாகிய கர்த்தரிடத்தில் திரும்புங்கள் என்கிறார்.

பிரியமானவர்களே, நாம் போய் கொண்டிருக்கிற பாதை சரியான பாதை தானா என்று நின்று யோசித்து பார்க்கவேண்டிய நேரம் இது. மீண்டும் ஒரு தங்கமான வாய்ப்பு  கடவுள் கொடுக்கிறார், அதை பிரயோஜனமாக்கி கொள்வோம். திரும்புவோம் கடவுளிடத்தில்.

நீங்கள் மனந்திரும்பினால் கடவுள் உங்கள் மீது கிருபைக்கூர்ந்து கோபத்தை விலக்கிக்கொள்வார். ஆதலால் கடவுளிடத்தில் திரும்புங்கள் மன்னிப்பை பெறுங்கள், இந்த தவசு நாட்கள் நமக்கு பிரயோஜனமாய் இருக்க வேண்டும்.

சாம்பல் புதன் என்று சொல்வதற்கு சில காரணங்கள்.

1 .சாம்பல் வெறுமையின் அடையாளம். யோபு.3௦:19
2 .சாம்பல் மனந்திரும்புதலின் அடையாளம். யோனா.3 :16
3 .சாம்பல் தூய்மையின்  அடையாளம் சங்கீதம்.102 :10


பழையவைகளை களைந்து புதியவைகளை வாழ்வில் சேர்த்து, தீமைகளில் வாழ்கிறவர்கள் வாழ்வில் மாற்றம் பெற்று புதியவர்களாக உருவகாப்படும்
நாட்கள்.  புதியவர்களாய்  வெளிப்புறத்தில் அல்ல, மாறாக உள்ளான மனிதனில் ஏற்படும் உன்னத மாற்றம்.

இயேசு ஆண்டவரை  பின்பற்றி வாழ்வில், சோதனைகளில் வெற்றிப்பெற்று, கிறிஸ்துவின் பிள்ளைகளாக வாழ இறைவன் நமக்கு அருள்புரிவாராக ஆமென்.

 
கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews