இன்றைய தியான வசனம். லூக்கா.4 :1 -13
பாடுகளின் தாசனாகிய இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம், இந்த ஒருசந்தி நாட்களில் நாம் அதிகமாக பக்தியை வெளிப்படுத்துகிறோம், ஆலயத்திற்கு அதிகமாக செல்வது, உபவாசமிருப்பது, போன்ற ஆன்மீக காரியங்களில் அதிக ஈடுபாடு காட்டுகிறோம், ஆனால் கிறிஸ்தவ வாழ்வில் அதிகமாக சோதனைகளை சந்தித்து, பல நேரங்களில் சோதனைகளில் தோல்வியடைகிறோம், காரணம் விசுவாச குறைவு.
சோதனை என்பது மனிதனை வீழ்த்தும் சாத்தானின் ஆயுதம், இயேசுவின் பிள்ளைகளாகிய நாம் அதை சாதனைகளாக மாற்றவேண்டும். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இச்சையை காண்பித்து கடவுளிடமிருந்து மனு குலத்தை பிரித்துவிட்டான்.
இரண்டாம் ஆதாமாகிய இயேசு கிறிஸ்துவையும் பிசாசு சோதித்தான், ஆண்டவரோ அதை சாதனையாக மாற்றினார். சாத்தானை ஓடவிட்டார்.
முதல் சோதனை கல்லுகளை அப்பங்களாக்கி சாப்பிட சொன்னான் ஆண்டவரோ அதை செய்து தன்னை பெரிய கடவுள் என்று காட்டவில்லை, காரணம் அவர் அதை செய்தால் அவனுக்கு கீழ்படிவதாகிவிடுமே.
உபாகமம் 8 :3 ஐ அவனுக்கு பதிலாக தருகிறார், மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வார்த்தையினால் பிழைப்பான் என்றார்.
இரண்டாவது, உயரிய இடத்திற்கு கொண்டுசென்று, உலகின் சகல நகரங்களையும் காட்டி, நீ என்னை பணிந்துக்கொள் இதை உனக்கு தருகிறேன் என்றான்,
இயேசு அவன் வார்த்தைக்கு மயங்காமல், ஆசைப்படாமல், கடவுளை மட்டுமே பணிந்து அவருக்கு மட்டுமே ஆராதனை செய் என்றார்.
ஆனால் நாமாக் irundhirundhaal என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும், விசுவாச உறுதி வேண்டுமே தவிர உலக ஆசை அல்ல.
மூன்றாவது, எருசலேமின் ஆலய உச்சியில் நிற்க வைத்து நீர் தேவ குமாரனானால் கீழே குத்தியும், தேவதூதர்கள் உன்னை கைகளில் ஏந்திக்கொள்வார்கள் என்றான்.
அதற்கும் இயேசு பணியாமல், உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாராதே என விரட்டினார்.
இயேசு ஆண்டவர் அதிகாரம் கையில் இருந்தும் அதை தவறாக பயன் படுத்தவில்லை, இதை செய்து தன்னை நான் கடவுள் என்று நிரூபிக்கவில்லை, மாறாக சிலுவையில் தன ஜீவனை தந்து, பாடுகளை ஏற்றுக்கொண்டு உலகின் மீட்பர் என்று நிரூபித்தார்,
பிரியமானவர்களே, சோதனைகளை நாமும் தைரியமாக எதிர்கொள்வோம், சாதனைகளாக மாற்றுவோம். வெற்றிபெறுவோம், சோதனைகளை சாதனைகளாக்குவோம்.
1. இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானைவிட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டு,
2. நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.
3. அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்.
4. அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5. பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
6. இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
7. நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.
8. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
9. அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.
10. ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
11. உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
12. அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.
13. பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.
14. பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment