WORD OF GOD

WORD OF GOD

Tuesday, March 1, 2011

காலை மன்னா

கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளே, இந்த புதிய மாதத்தின் முதல் நாளில் உங்களை வாழ்த்துகிறேன். இந்த நாளின் ஆசீர்வாதத்திற்கென்று நாம் தெரிந்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை.    

சங்கீதம் 121 : 5  - 7 

5. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.

6. பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.

7. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்


குளிர் காலம்  கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வெயில் காலம் அதிகமாகி வருகிறது, பொதுவாக வெயில் காலத்தில் தான், நமக்கு நிழலின் அருமை தெரியும், கடுமையான வெயிலில் கொஞ்ச தூரம் நடந்து வந்தால் அவ்வளவு தான் நிழல் எங்கே இருக்கிறது என தேட ஆரம்பித்து விடுவோம்.

நம்முடைய தியான பகுதியில் கடவுள் நமக்கு நிழலாய் இருக்கிறார் என்பதை காண்கிறோம், பொதுவாக நம்முடைய நிழல் தான் நம்மை தொடர்ந்து வரும், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது நம்மை தொடர்ந்துக்கொண்டே இருக்கும், அதனால் நமக்கு எந்த பலனும் இல்லை, ஆனால் கர்த்தர் நமக்கு நிழலாய் இருக்கிறார் என்று வசனம் சொல்லுகிறது, கர்த்தர் நமக்கு நிழலாய் இருந்தால் என்ன நன்மைகள் வரும் என்பதையும் சங்கீதம் கூறுகிறது.

நமக்கு நிழலாய் ஏன் கடவுள் இருக்கிறார் என்றால் நம்மை பாதுகாப்பதற்காக. பகலில் வெயிலோ இரவில் நிலவோ அதாவது குளிரோ, இருளின் ஆபத்துகளோ ஒன்றும் அணுகாமல் இருக்க நமக்கு நிழலாய் இருந்து நம்மை பாதுகாக்கிறார்.

அது மட்டுமல்ல எந்த ஒரு தீங்கும் அணுகாத வண்ணம் நம் ஆத்துமாவை, அதாவது உயிரை பாதுகாக்கிறார்.

இந்த வசனங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு சத்தியமானவைகள், 2011  ம் ஆண்டை காண செய்த தேவன் அதிலே மூன்றாவது மாதத்தை காண செய்திருப்பது எவ்வளவு அற்புதம். தினந்தோறும் ஆபத்துகள், பெயர் தெரியாத வியாதிகள், உயிரை பிடுங்கும் இயற்கை அழிவுகள் ஒன்றும்  நம்மை செதப்படுத்தாவண்ணம் பாதுகாத்து இன்று, இந்த மார்ச்சு மாதத்தை காண செய்திருப்பது எவ்வளவு பெரிய ஈவு?

இன்றுவரை மட்டுமல்ல இனிவரும் நாளிலும் இறைவன், நமக்கு நிழலாய் இருந்து நம்மை பாதுகாப்பார், எனவே  தேவன் நம்மோடிருக்கிறார், தன குமாரனைக்கொண்டு நம்மை மீட்டவர் நமக்கு நிழலாய் இருந்து நம் ஜீவனை காக்கிறார் என்ற சந்தோஷத்தோடு இந்த புதியமாதத்தையும் நம் பணிகளையும்   துவங்குவோம்.  ஆமென். 


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews