WORD OF GOD

WORD OF GOD

Saturday, March 12, 2011

மகிழ்ந்திருப்போம் (மாதர் பகுதி)

அன்பான இணைய தள நண்பர்களே உடன் விசுவாசிகளே, உங்கள் யாவருக்கும் இன்று இன்னொரு இனிமையான அறிமுகம், இன்றுமுதல்


மாதர் பகுதி துவங்குகிறது, இதை ஒரு மாதரே எழுதினால் தான் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதால், திருமதி உஷா ராஜ்குமார் அவர்களை தொடர்புக்கொண்டு கேட்டபோது அவர்கள் உற்சாகமாக ஒப்புக்கொண்டு இதை இன்று நமக்கு வழங்கி இருக்கிறார். தியானத்திற்கு போவதற்கு முன் அவரை பற்றி.

திருமதி உஷா ராஜ்குமார் அவர்கள், இறையியல் பட்டய பயிற்சி முடித்தவர், தற்போது ஆம்பூரில் உள்ள பெதஸ்தா மருத்துவ மனையில் நோயாளிகளுக்கான மன நல ஆலோசகராகவும், ஆவிக்குரிய உதவியாளராகவும் பணியாற்றி  வருகிறார்கள், இவர் அருள்திரு ராஜ்குமார் ஆயர் அவர்களின் துணைவியார் ஆவார், இவர்களுக்கு ரேச்சல் உதய நிலா என்ற ஒரு மகள் இருக்கிறார், இவருடைய  எழுத்துக்கள் மிகவும் ஆவிக்குரிய பலன் தரக்கூடியவை. இனி அவரோடு...


 
இணைய தளத்தின்  வழியாய் என் இனிய தோழிகளுக்கு,  இந்த நாளை இறைவன் நமக்கு இனையில்லாததாய் தந்திருக்கிறார். புதியதாய் ஒரு சூரிய உதயத்தை கண்டு இன்புற்ற  நாம், இந்த நாளின் மகத்துவத்தினை பெரும்பாலும் எண்ணிப் பார்ப்பதில்லை.  

ஒவ்வொரு விடியலிலும்  நமக்கு புதிய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு புதிய நாளும் நமக்காக பல்வேறு காரியங்களை ஆயத்தம் செய்து வைத்திருக்கிறது.

மனதிற்கினிய சம்பவங்கள் பல நடைப்பெறுகின்றன, மனக்கசப்பான காரியங்களும் நடைப்பெறுகின்றன, சுவாரஸ்யமான காரியங்கள் நடைபெறுகின்றன, சுகக்கேடான விஷயங்களும் நடைப்பெறுகின்றன.

பொழுது புலர்ந்து இரவு சாயும் போது யோசித்து பார்த்தால், மிகவும் சுவாரஸ்யமான கதையாக இந்த நாளைக் கடந்துக்கொண்டிருப்போம்.


தோழி நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து " நாளைய தினத்திற்காக கவலைப்படாதேயுங்கள், நாளைய தினம் தனக்காக கவலைப்பட்டுக்கொள்ளும், அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்" (மத்.6 :34 ) என்று அழகாக கூறியிருக்கிறார்.

ஆனால் அந்த உண்மையை அனேக வேளைகளில் நாம் நினைக்க மறந்துவிடுகிறோம், ஒவ்வொன்றிற்காகவும், ஒவ்வொரு நொடியும் கவலைப்பட்டுக்கொண்டே காலத்தை கழிக்க முற்படுகிறோம். நாமும் கவலைப்பட்டு நம்மை சுற்றியுள்ளவர்களையும் கவலைப்பட வைக்கிறோம்.

அப்படியல்ல அன்புத் தோழி, கவலைப்படுவதற்காகவும், கண்ணீர் விடுவதற்காகவும் நாம் படைக்கப்படவில்லை, இறைவனின் இணையில்லா திட்டத்தின்படி, நாமும் மகிழ்ச்சியாக வாழ்ந்து, நம்மை சுற்றியுள்ளவர்களையும் கடவுளின் நாம மகிமைக்கென மகிழ்ச்சியாக வைத்திருக்கும்படியாகவுமே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்.

நமக்கெனவே கடவுள் பார்த்து, பார்த்துப் படைத்த இந்த உலகில், பத்திரமாய் நாம் வாழும்படியாய், இம்மட்டும் நம்மை நடத்தி வந்த இறைவன், இதை வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை நம்மை அற்புதமாய் நடத்திக்கொண்டிருக்கிறார்.


வலிகளையே  நினைத்துக்கொண்டிருப்பதைவிட வல்லமையுள்ள கடவுள் நம்மை வளமாய் நடத்த வல்லவர் என்பதை உணர்ந்து, நமது துக்கங்களையும், சந்தோஷங்களையும் அவரிடம் பகிர்ந்துவிட்டு, மகிழ்வோடு அவர் நமக்கு தந்த பணிகளை செய்திருப்போம், அவர் நாம மகிமைக்கென மகிழ்ச்சியோடு நம்மை அர்ப்பணிப்போம்.

நாளைய தினத்தை பற்றி நாம் கவலைப்படாமல், இன்றைய தினத்தின் இறை நடத்தலுக்காக இதயப்பூர்வமாய் அவருக்கு நன்றி செலுத்தி, அவரில் மகிழ்ந்திருப்போம்.

ஆண்டவர்தாமே நம்மை ஆசீர்வதித்து, தமது பரிசுத்த ஆவியினால் நம்மை பலப்படுத்தி, பிரகாசிக்க செய்திடுவாராக ஆமென்.

இறை பணியில்
உங்கள் இனிய தோழி

உஷா ராஜ்குமார். MA, BTh.
பெதஸ்தா மருத்துவமனை ஆம்பூர்.


தோழிகளே படித்துவிட்டு கருத்துரையிடாமல் போவது சரியோ? உங்கள் அனுபவங்களை பிறர் நன்மைக்காக பகிருங்கள்.

ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

1 comment:

  1. Thanks for the Excellent Message Mrs.Usha Rajkumar!!

    Really this gave me a good Strength and from now I will not worry about tomoro and will submit my worries to our heavenly Father!!!

    Keep going with the good work..God with you all!!!

    ReplyDelete

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews