WORD OF GOD

WORD OF GOD

Tuesday, March 15, 2011

காலை மன்னா

எனதன்பான உடன் விசுவாசிகளே, இன்றைய தியான வசனம், சங்கீதம்.3 :8 


இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.)



இரட்சிப்பு என்கிற வார்த்தையின் அர்த்தம் விடுதலை என்பதாகும், பல நேரங்களில் இரட்சிப்பு என்கிற வார்த்தையின் அர்த்தத்தை அநேகர் புரிந்துக் கொள்வதில்லை, யாரெல்லாம் இரட்சிப்பு வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறார்களோ அவர்கள் அத்துணை பேருக்கும் இறைவன் ரட்சிப்பை தருகிறார்,

இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்தபோது, அந்த அடிமைத்தனத்திலிருந்து இரட்சிப்பு வேண்டும் என்று கடவுளை  நோக்கி கூக்குரலிட்டார்கள். இதன் பலன் கடவுள் அவர்கள் இடுகிற கூக்குரலைக்கேட்டு அவர்களுக்காக இறங்கி அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து இரட்சித்தார், இரட்சிப்பு என்றால் விடுதலை என்று அர்த்தம்.

நம்முடைய தியானப்பகுதியில், தாவீதுக்கு விரோதமாய் அநேகர் எழும்பியிருக்கிரத்தை தாவீது இறைவனிடம்  வெளிப்படுத்துகிறார், மேலும் இவனுக்கு இரட்சிப்பு இல்லை என்று மற்றவர்கள் கூறுவதையும் கடவுளிடம் முறையிடுகிறார், காரணம் இரட்சிப்பு என்கிற விடுதலையை தரக்கூடிய அதிகாரம் கொண்டவர்  தானே தவிர மனிதன் அல்ல.

பல நேரங்களில் நம்முடைய வாழ்வில் நாம் உபத்திரவங்களை சந்திக்கும் போது. நம் துன்பத்தை கண்டு இன்புறுவோரும் உள்ளனர், அவ்வளவுதான் இனி அவனுக்கு இரட்சிப்பு இல்லை என்றும், இனி அவர்கள் எழ முடியாது என்றும் கூட மற்றவர்கள் கூறலாம், ஆனால் இரட்சிப்பை தருபவர் கடவுளே தவிர மனிதனல்ல.

நம்மை இரட்சிக்க தன உயிரை கொடுத்தவரல்லவா? நம் ஆண்டவர், நம்மை இரட்சிக்காமல் இருப்பது எப்படி, எனவேதான் நம்முடைய தியானப்பகுதியில் தாவீது கூறுகிறார், இரட்சிப்பு கர்த்தருடையது, துன்பமோ, வியாதியோ, தீய பழக்கவழக்கங்களோ எதுவுமே நம்மை அடிமைப்படுத்த முடியாது, இரட்சிப்பை தருகிற கடவுளிடத்தில் போய்  ஆண்டவரே என்னை இரட்சியும் என்று அவர் பாதம் சென்றால், நம்மை இழிவாய் நினைத்தவர்கள் முன் தலை நிமிர செய்வார்.

அது மாத்திரமல்ல நம்மை ஆசீர்வதிப்பார். அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் அவருடைய ஜனத்தின் மேலேயே இருக்கிறது என்று தாவீது கூறுகிறார். அப்படியானால் நாம் கடவுளின் ஆசீர்வாதத்தை சுமந்துக்   கொண்டிருப்பவர்கள்.

இரட்சிப்பும் ஆசீர்வாதமும் நம்மிடத்திலிருக்கிறது, காரணம் இரட்சிப்பையும் ஆசீர்வத்தைத்தையும் அருளுகிற கடவுளை நாம் சொந்தமாக பெற்றவர்களல்லவா?

தைரியமாய், சந்தோஷமாய் இந்நாளை துவங்குவோம், ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews