WORD OF GOD

WORD OF GOD

Sunday, March 13, 2011

இயேசுவின் கிருபை

இன்றைய திரு வசனங்கள்:

ஆதியாகமம்.2 :7 -9 , 15 -17, 3 :1  -7
ரோமர்.5 :12 -19
மத்தேயு.1 -11 

கடவுளிடமிருந்தும் கிறிஸ்துவிடமிருந்தும் நம் அனைவருக்கும் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக ஆமென், கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளே, கடவுள் மனிதனை படைப்பதற்கு முன் மனிதனுக்கு தேவையான எல்லாவற்றையும் படைத்துவிட்டு, கடைசியாக மனிதனை படைத்தார், காரணம் மனிதன் இவ்வுலகில் இன்புற்று வாழ அவர் விரும்பினார்.

ஆதியாகமம், 2 :7 -9  வரையுள்ள வசனங்கள் எப்படி கடவுள் மனிதனை படைத்தார் என்பதை விளக்குகின்றன, எல்லாவற்றையும், எல்லா ஜீவராசிகளையும் தன வார்த்தைகளால் உண்டாக்கின கடவுள், மனிதனை மட்டும் மண்ணினாலே உருவாக்கி அவனுக்குள் தன் ஜீவ சுவாசத்தை ஊதி உண்டாக்கினார், இதன் மூலம்  மற்றெல்லா படைப்புகளிலிருந்தும் மனிதன் சிறப்பு வாய்ந்தவன்  என்பது விளங்குகிறது.

எனவே மனிதனுக்கு ஒரு அழகான தோட்டத்தை உருவாக்கி கொடுத்து அதில் வாழவைத்தார், அந்த தோட்டத்தில் எப்படியும் வாழ அனுமதித்த கடவுள் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் கொடுத்தார், நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மட்டும் புசிக்க வேண்டாம் என்றார். அதை சாப்பிட்டால் சாகவே சாவாய் என்றார்.

ஆனால் 3  ம் அதிகாரத்திலிருந்து மனிதனின் வாழ்வு தடம் மாற ஆரம்பிக்கிறது, சர்ப்பம் வந்து இதை சாப்பிட்டால் நீங்கள் தேவர்களைப்போல ஆவீர்கள் என்று அவர்களை தூண்டிவிடுகிறது, சாத்தானின் தூண்டுதலால் அவர்கள் புசித்து கடவுளுக்கு விரோதமாய் பாவம் செய்தனர், அங்கேதான் மனிதனின் முதல் பாவம் அவனுடைய சபலத்தால் உண்டாகிறது, இதன் விளைவு அவனுடைய தலை முறை  முழுதும் இறைவனின் கோபாக்கினைக்கு ஆளாகிறது, ஏதேனின் மகிழ்வில் இருந்தவன், பாடுகளும் போராட்டங்களும் நிறைந்த பாவ வாழ்வுக்குள் விழுந்து போனான், எல்லாவற்றுக்கும் மேலாக நித்திய ஜீவனை இழந்து போனான்.

நம்முடைய சுவிசேஷ பகுதியில் இயேசுவுக்கு நேர்ந்த சோதனையை பற்றி பார்க்கிறோம், அங்கே பிசாசானவன் ஆண்டவரை, பசியை பயன்படுத்தி  உணவினால்,  பூலோக சம்பத்துக்களினால், அதிகார துஷ்பிரயோகத்தால் அவரிடையே ஒரு சபலத்தை உண்டாக்க நினைக்கின்றான் ஆனால் ஆண்டவரோ எதற்கும் மயங்காதவராய் அவனை முற்றிலும் தள்ளிவிடுகிறார். நாம் கொஞ்சம் உற்று கவனித்தால் இந்த உலகம் முழுவதும் நடக்கிற அத்தனை தீமைகளுக்கும் இந்த மூன்றும் தான் காரணமாய் இருப்பதை நாம் காணமுடியும்.

ஆனால் ஆண்டவரோ உறுதியாய் அந்த மாய வலைக்குள் சிக்கி விடாமல் உறுதியான விசுவாசத்தில் தன்னை காத்துக்கொள்ளுகிறார், முழுவதுமாய் கடவுளுக்கு கீழ்படிகிறார், பிசாசானவன் அவரிடம் தோற்று ஓடிவிடுகிறான்,

இதை பவுலடிகளார் ரோமர்.5 :12 -19  வரையுள்ள வசனங்களில் மிக தெளிவாக விளக்குகிறார், ஒரே மனிதனை பாவம் எப்படி இந்த முழு உலகுக்கும் சாபத்தை கொண்டுவந்ததோ, அதேபோல ஒரே மனிதனின் கீழ்படிதல் இந்த முழு உலகிற்கும் மீட்பை கொண்டு வந்தது என்கிறார், காரணம் தகுதியில்லாத நமக்காக சிலுவையின் மரணபரியந்தம் இயேசுகிறிஸ்து தன்னை தாழ்த்தினார். அவருடைய கிருபையே இன்று நம்மை கடவுளுடைய பிள்ளைகளாய் நிலை நிறுத்தியிருக்கிறது.

இந்த கிருபையின் மேன்மையை உணர்ந்தவர்களாய், விசுவாசத்தைக் காத்துக்கொண்டு, கிறிஸ்துவில் ஜீவியம் செய்ய கடவுள் நம்மை வழிநடத்தி காப்பாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews