கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே காலை ஸ்தோத்திரங்கள். இன்றைய தியான பகுதி, யாத்திராகமம்.24:12, 15-18
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே இது தேர்தல் நேரம் என்பதால், நமது தலைவர்களின், பேச்சில். செயலில், நடவடிக்கையில், அவர்கள் எடுக்கிற முடிவுகளுள் அனேக எதிர்பாராத மாற்றங்கள் இருப்பதை காண முடிகிறது, இந்த எதிர்பாராத மாற்றங்கள் நடக்க ஒரே காரணம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான், அதே போல எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேலர்களை காக்க, அவர்கள் வாழ்வை வெற்றியுள்ள வாழ்வாக மாற்ற, கடவுள் அனேக எதிர்பாராத திருப்பங்களை நடத்திக்காட்டினார்,
கடவுள் ஏற்படுத்திய இந்த எதிர்பாராத திருப்பங்கள் நடந்த இடங்களில் சினாய் மலை மிக முக்கிய இடத்தை வகிக்கிறது, சினாய் மலை ஒரேப் மலை என்றும் அழைக்கப்படுகிறது, இந்த மலையிலிருந்து கடவுள் மோசேவை அழைத்தார், யாத்.3 :1 அதற்கு பிறகுதான் இந்த கனமான திருப்பணிக்கு மோசே தன்னை அர்ப்பணித்தார், எனவே, இஸ்ரவேலரை மீட்டுக்கொண்டு திரும்பி வரும்போது இஸ்ரவேலர்களை, அழைத்துக்கொண்டு, சினாய் மலைக்கு வந்தார், காரணம் யாத்.3 :12 ல் கடவுள் இதை அவர்களுக்கு அடையாளமாக கொடுத்தார் நீ அவர்களை மீட்டுக் கொண்டு வரும்போது இந்த மலையில் எனக்கு ஆராதனை செய்வீர்கள் என்றார், அதன் படியே நடந்ததை தான் இன்றைய தியானப்பகுதியில் நாம் காண்கிறோம்.
இஸ்ரவேலர்களின் வாழ்வில் தான் செய்துகொண்ட உடன் படிக்கையை நிறைவேற்றும் அடையாளமாகவும், அவர்கள் தன்னுடைய ஜனம் என்பதற்கு அடையாளமாகவும், கடவுள் நியாயப்ரமாணத்தை அவர்களுக்கு கொடுப்பதற்காக, சினாய் மலைக்கு மோசேவை மீண்டும் அழைக்கிறார், அவர் அழைத்தபோது அங்கே அனேக மகிமையான நிகழ்வுகள் நடந்ததை காண முடிகிறது, அவைகளில் மிக முக்கியமானது. கடவுளுடைய மகிமை மோசேவையும் சினாய் மலையையும் சுற்றி ஆறு நாட்கள் தங்கியது.
ஆறு நாட்களுக்கு பிறகு கடவுள் மோசேவை கூப்பிட்டு பேசினார் இந்த காட்சி இஸ்ரவேலர்களுக்கு பட்சிக்கிற அக்கினியாக காட்சியளித்தது என்று வசனம் கூறுகிறது, இந்த உரையாடல் 32 :15 வரை தொடர்கிறது இந்த சம்பவத்திற்கு பிறகு தான் மோசே மக்களை வழி நடத்துவதற்கான புது பலத்தை பெற்றுக்கொண்டான். தன்னையே அர்ப்பணிக்கும் பணியில் துணிவுடன் இறங்கினான்.
அதேபோல புதிய ஏற்பாட்டிலும் இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் மலைகள் மிக முக்கிய இடத்தை பெறுகின்றன, கலிலேய மலைகளில் தான் ஆண்டவர் தன ஊழியத்தை துவங்கினார், அவரது மலை பிரசங்கம் உலகம் முழுதும் பிரசத்தி பெற்றது, அதேபோல அவர் வாழ்வில் எதிர்பாராத திருப்பம் நடந்ததும் ஒரு மலையில் தான், மத்தேயு.17 :1 முதல் அதை நாம் வாசிக்கலாம், அதாவது 16 ம் அதிகாரத்தில் தான் அனுபவிக்கபோகிற பாடுகளை பற்றி பேசிய ஆண்டவர் இங்கே அதற்கான மகிமையின் அனுபவத்தை பெற்றுக்கொள்கிறார், திடீரென அவர் தோற்றம் பிரகாசமாய் மாறினது மோசேவும் , எலியாவும் அவர் பக்கத்தில் நின்றனர்.
இந்த இரு சம்பவங்களுமே கடவுள் தன ஜனத்தை காக்க தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் வாழ்வில், ஜனங்களை காக்க ஆசீர்வாதம் அளிக்கும் விதமாக கடவுள் செயல்படுத்தினார்.
நம்மை காக்க கடவுள் எதிர்பாராத நன்மைகளை செய்கிறவர். இந்த துணிவோடும் அர்ப்பணிப்போடும் வாழ்வோம்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment