WORD OF GOD

WORD OF GOD

Tuesday, August 27, 2013

வாருங்கள் வல்லவரை ஆராதிப்போம்!!


      கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே, நாளை (28.08.2013) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை, வாணியம்பாடி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள, நல் மேய்ப்பர் லுத்தரன் ஆலயத்தில் (Good shepherd Lutheran Church)  உபவாச கூடுகை நடைபெற உள்ளது, கர்த்தருடைய வார்த்தையை நானும் அருள்திரு.ஜான் பெர்ணார்ட்ஷா அவர்களும் பகிர்ந்துக் கொள்ள இருக்கிறோம், வருவதற்கான வாய்ப்புள்ள யாவரையும் அன்புடன் அழைக்கிறேன். உபவாச கூடுகை திட்டமிட்டபடி தடையின்றி நடக்கவும் அனேகர் பங்கு பெற்று கடவுளின் ஆசீர்வாதம் பெறவும் ஜெபிக்கும்படி உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

Friday, August 9, 2013

சிறுவர் கொண்டாட்டம்



கிறிஸ்துவுக்குள் அன்பான என் இணைய நண்பர்களே, உங்கள் யாவருக்கும் என் அன்பான ஸ்தோத்திரங்கள், நாளை காலை, எமது ஊழிய குழுவாக சிறுவர் கொண்டாட்டம் என்ற சிறார்களுக்கான திருப்பணிக்காக சிந்தகமெனிபெண்டா என்ற மலையில் தேவராஜபுரம் என்ற பகுதியில் உள்ள  ஆலயத்திற்கு கடந்து போகிறோம். ஊழியர் வி.கெ.சம்பத்குமார் அவர்கள் நமது ஊழியத்தினை அறிந்து நம்மை உற்சாகமாய் அழைத்துள்ளார். சிறிது இடைவெளிக்கு பின் கர்த்தர் மீண்டும் இப்படியொரு வாய்ப்பை  கிருபையாய் எனக்கு கொடுத்துள்ளதால் மிகவும் மகிழ்கிறேன். கர்த்தருக்கே துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக. இந்த ஊழியத்தை உங்கள் ஜெபத்தில் தாங்கும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன். நன்றி..

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

Sunday, August 4, 2013

Sunday sermon

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான சகோதர, சகோதரிகளே, நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த சமயம் ஒரு அமைச்சர் கொலை செய்யப்பட்டார், அந்த கொலை வழக்கில் ஒரு பெரிய மனிதரின் பெயர் அடிப்பட்டது, நான் படித்துக்கொண்டிருந்த கல்லூரி, அவர் வாழும் மாவட்டத்தில் இருந்ததால் அந்த கொலை வழக்கு அங்கே பெரும் பரபரப்பாக பேசப்பட்டது, கல்லூரிக்கு வெளியே ஒரு முதியவரோடு இதை குறித்து நான் பேசிய போது அவர் கூறிய கருத்து யாதெனில் அந்த பெரிய மனிதர் ஒரு காலத்தில் பல குற்றங்களை செய்திருக்கிறார், என்றும், ஆனால் இவ்வளவு பெரிய மனிதனாக வளர்ந்த பிறகு இப்படி ஒரு காரியத்தை செய்திருக்க கூடாது என்றும் கூறினார், அனேகரும் இதே கருத்தைதான் கொண்டிருந்ததை நான் அறிவேன்.

இந்த கருத்து ஒரு உண்மையை உணர்த்துகிறது. அதாவது வாழ்வில் நாம் ஒரு தகுதிக்கு வந்த பிறகு, அந்த தகுதிக்கு குந்தகம் விளைவிக்கிற கீழ்தரமான காரியங்களை செய்யக்கூடாது. அதைதான் பவுல் எளிமையாக நாம் எல்லாரும் புரிந்துக் கொள்ளும் வகையில் 1கொரி.13:11ல் நான் பெரியவனான போது குழந்தைக்குரிய குணங்களை விட்டுவிட்டேன். நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்து போகும் என்கிறார். அதை இன்னும் விளக்கமாக பவுல் விவரிக்கிற பகுதிதான் இன்றைய தியானபகுதியாகிய கொலோ.3:1-11 வ்ரையுள்ள வசனங்கள்.

முதல் வசனத்தில் பவுல் கூறுவது நீங்கள் கிறிஸ்துவோடு எழுந்ததுண்டானால், மேலானவைகளை நாடுங்கள் என்கிறார், அதாவது பாவத்தில் உற்பவித்து பிறந்த நாம், ஞானஸ்னானத்தின் மூலமாக பாவத்திற்கு மரித்து, நமது இரட்சகராம் இயேசுவோடு கூட எழுந்திருக்கிறோம், எனவே ஞானஸ்னானம் பெற்றவர்களுக்கென ஒரு தகுதி இருக்கிறது அந்த தகுதிக்குரியவைகளை மட்டும் நாம் நாட வேண்டும் என்கிறார். ஏனென்றால் இனி பிழைத்திருக்கிறது நாமல்ல நமக்குள் இருக்கிற கிறிஸ்துவே. அப்படியானால் கிறிஸ்து நமக்குள் இருக்கிற தகுதிக்கு நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

அது எப்படிப்பட்ட வாழ்க்கை என்பதையும் மூன்று நிலைகளாக குறிப்பிடுகிறார். முதல் நிலை; விபச்சாரம், அசுத்தம், மோகம், விக்கிரக ஆராதனையான பொருளாசை ஆகியவற்றை உண்டுபண்ணுகிற அவயவங்களை நாம் களைந்து விட வேண்டும்.

நாம் வாழும் இன்றைய காலத்தில் விபச்சாரம், பொருளாசை போன்றவகளின் மீதான மோகம் கட்டுபாடின்றி உருவாகி இந்த தேசத்தை பாழ்படுத்தி வருவதை நாம் அறிவோம். எப்பெண்ணையும் அன்னையாக பாவிக்கும் கலாச்சாரம் கொண்ட தமிழ் நாட்டில் கடந்த 5 வர்டங்களில் இல்லாத அளவுக்கு கற்பழிப்பு குற்றகள் பெருகியிர்க்கிறதென ஒரு கணக்கெடுப்பும், அதே 5 ஆண்டுகளில் பச்சிளம் குழந்தைகள் மீதான வல்லுறவு கொள்ளும் மூர்க்க குணம் 2 மடங்கு உயர்ந்திருப்பதாகவும் கூறுகிறது. மாத்திரமல்ல பொருளாசை இன்ரு மனிதனை ஆட்டி படைக்கிறது, இலஞ்சம் ஊழல், இல்லாத இடமே இல்லை, பொருலாசை ஒரு தீயாய் பரவி வருகிறது. திருச்சபையிலும், ஏன் ஊழியர்களின் மத்தியிலும் பொருளாசை பேய் ஆட்டி படைக்கிறது. பவுல் கூறுகிறார், ஒரு கிறிஸ்தவன் விபச்சார சிந்தையையும், பொருளாசையையும் அழிக்க வேண்டும் என்கிறார்.

2ம் நிலை: கோபம், மூர்க்கம், பொறாமை, தூஷணம், வம்பு வார்த்தைகள் இவைகளை விட்டுவிட வேண்டும். அன்பானவர்களே, கோபம் பொறாமை இன்று தலைவிரித்தாடுகிறது, பிரச்சனைகளை அமைதியாக கையாள்வோர் யாரும் இக்காலத்தில் இல்லை, மாத்திரமல்ல தனக்கு பிடிக்காதவர்களை தூஷணம் பெசுகிற நாவுகள் கிறிஸ்தவர்கள் மத்தியிலேயே பெருகி கிடக்கிறது. ஒரு மனிதரிடத்தில் நம்பி ஒரு விஷயத்தை கூறினால் அது நானூறு பேருக்கு திரித்து பரப்புகிறவர்கள் பெருகிவிட்டார்கள், ஏன் ஒரிரு போதகர்களே அப்படி செய்கிறார்கள், நாம் நன்றாக பேசினாலும் வம்புக்கு இழுக்கிறார்கள், பேசவே பயப்படுகிற சூழ் நிலை உருவாகிவிட்டது, பவுல் கூறுகிறார் இதை விடாதவன் ஞானஸ்னானம் பெற்றவன் அல்ல.

3ம் நிலை; பொய் சொல்லாதிருங்கள்,. அயலானுக்கு விரோதமாய் பொய் சாட்சி சொல்ல வேண்டாம் என்பது இறைவன் நமக்கு கொடுத்திருக்கிற நியாயப்ரமாணம். விபச்சாரம், கொலை, திருட்டு போன்றவை எவ்வளவு பெரிய பாவமோ அவ்வளவு பெரிய பாவம் பொய். ஆனால் பொய் பேசியே இனறைக்கு பலர் பிழைப்பு நடத்துகிறார்கள், அது பழைய மனிதனின் குணம் அதை களைந்து போட சொல்லுகிறார் பவுல்.

ஏன் இதயெல்லாம் செய்ய வேண்டும்? 6ம் வசனத்தில் சொல்லுகிறார் இவைகளை பொருட்டே தேவ கோபாக்கிணை வரும். காரனம் நாம் பாவத்திற்கு தொண்டு செய்ய அழைக்கப்பட்ட கூட்டம் அல்ல பரிசுத்தருக்கு தொண்டு செய்ய அழைக்கப்பட்ட கூட்டம். இதயெல்லாம் கடைபிடிக்க முயல வேண்டும், என்றெல்லாம் பவுல் கூறவில்லை கடைப்பிடித்தே ஆக வேண்டும் என்கிறார் இல்லையேல் நாம் அறுகதையற்ற கிறிஸ்தவர்கள். ஆண்டவர் ஜீவனை கொடுத்து மீட்டு நம்மை தகுதியுள்ளவர்களாக்கியதை நாம் பயன்படுத்துக்கொள்ள வேண்டாமா? நம் தகுதியை நாம் காத்துக் கொள்ள வேண்டாமா? அன்பானவர்களே இது நியாப்ரமாணம் அல்ல கடவுளின் கோபத்துக்கு விலகி பரலோகம் போகும் வழியை தெரிவிக்கிற சுத்த சுவிசேஷம். ஆமேன். 

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews