WORD OF GOD

WORD OF GOD

Monday, November 10, 2014

உண்மை உபவாச கூடுகை




 உபவாச கூடுகை கர்த்தருடைய பெரிதான கிருபையினால் கடந்த

சனிக்கிழமை (8.11.2014) அன்று மாலை 6.30 முதல் 8 மணிவரை சிறப்பாக நடை

 பெற்றது. மூன்று ஏழை விதவை சகோதரிகள் வந்து நமது காணிக்கையை

பொருட்களாக பெற்றுக் கொண்டு கர்த்தருக்கு நன்றி செலுத்தி கடந்து

போனார்கள். நமது ஜெப கூடுகையோடு இணைந்து அருமை சகோதரர் விக்டர்

 அவர்கள் ஒரு குடும்பத்திற்கும்,  தன் பெயரை தெரிவிக்காமல் ஒருவர் இரு

குடும்பங்களையும் தாங்கினார்கள். அநேக விசுவாசிகள் வந்து பங்கெடுத்து

 உற்சாகமாய் ஏழைகளை தாங்க காணிக்கை கொடுத்து தேவ

ஆசிர்வாதத்தோடு கடந்து சென்றார்கள். கர்த்தருக்கு பெரிதான நன்றி. உதவி

 பெற்றுக் கொண்ட சகோதரிகள் திருமதி.பவானி , திருமதி.சாந்தி ,

திருமதி. மகேஸ்வரி இவர்கள் மூவருக்கும் படிக்கிற பிள்ளைகள்

இருக்கிறார்கள் , அவர்களுக்காக அவர்களுடைய பிள்ளைகளுக்காக உங்கள்

 ஜெபங்களில் தாங்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த ஜெபக்கூடுகையில் ஊழியர் செல்வம் அவர்கள் துதி ஆராதனை

நடத்தினார். மீட்பின் பேழை ஆசிரியரும் ஊழியருமான உதயக்குமார்

அவர்களும், அருள்திரு ஐசக் ஷண்முகம் அவர்களும் பங்கெடுத்து ஜெபித்து

சிறப்பித்தனர்.


    ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். நீதிமொழிகள்.19:17












Thursday, November 6, 2014

கட்டுரை போட்டி



அன்பான உடன் விசுவாசிகளே, நமது இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபையில் அங்கமாக உள்ள ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்தவும், திருச்சபையின்  எதிர்காலத்தை குறித்து சிந்திக்க வைக்கவும் ஓர் எளிய
முயற்சியாக ஒரு கட்டுரை போட்டியை நடத்துகிறோம்.

தலைப்பு : நான் விரும்பும் இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபை.

இந்த தலைப்பில் 2 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி அனுப்பவும்.

முதல் பரிசு :               500 ரூபாய்
இரண்டாம் பரிசு:       250 ரூபாய்
மூன்றாம் பரிசு:         வேதாகமம்.

தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் www.jesusblessings.blogspot.com என்ற இணைய தளத்திலும் எனது முகனூல் (facebook) பக்கத்திலும் பதிவேற்றப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 29.11.2014

வேத வினா போட்டி





அன்பான சகோதர சகோதரிகளே, நமது ஊழியத்தின் சார்பாகவும் மீட்பின் பேழை பத்திரிக்கையின் சார்பாகவும் ஒரு மாபெரும் வேத வினா விடை போட்டி நடக்கவுள்ளது. முதல் பரிசு - 3000 ருபாய் , இரண்டாம் பரிசு - 2000, மூன்றாம் பரிசு - 1000, நுழைவு கட்டணம் ருபாய் 75/-

படிக்க வேண்டியது : மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்.

இடம் : மேல்பட்டி (மீட்பின் பேழை வளாகம்)
                ஆம்பூர் அருகில் வேலூர் மாவட்டம்.

நாள் : 15.11.2014

நேரம் : காலை 10 மணி.

அனைவரும் திரண்டு வந்து பங்கெடுக்கும்படி உங்களை அன்போடு அழைக்கிறேன்.

Thursday, October 9, 2014

உண்மை உபவாச கூடுகை - September-13

    




கிறிஸ்துவுக்குள் அன்புடையீர், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, கடந்த மாத உபவாச கூடுகையானது செப்டம்பர்.13ம் தேதி 2வது சனிக்கிழமை, உங்களது ஜெபத்தாலும், தேவ கிருபையாலும் நிறைவாக நடை பெற்றது. சிறு கூட்டமாய் கூடி வந்தாலும் வந்தவர்கள் யாவரும் கர்த்தரின் பெரிதான கட்டளையை நிறைவேற்றும் மகத்தான கூட்டமாய் உற்சாகமாய் கூடிவந்தனர்.

இந்த சிறியரில் ஒருவனுக்கு எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்  என்றும் வாருங்கள் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே என்று அவர் அழைப்பதும்  இத்திருப்பணி செய்வோரைதானே.. 

சகோதரி ஜமீலா அவர்கள் நமது காணிக்கையின் பலனை பெற்றுக் கொண்டார்கள். ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அவர் தன கணவனை இழந்து மூன்று படிக்கும் பிள்ளைகளோடு தன்  வாழ்வில் போராடி வருகிறார்கள். நமது உதவியை  பெற்றுக்கொண்டு கண்ணீரோடு கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். அருக்திரு.ஜான் பெர்னாட்ஷா அவர்களும் ஊழியரும் மீட்பின் பேழை புத்தகத்தின் ஆசிரியருமான உதயகுமார்  அவர்களும் பங்கெடுத்து சிறப்பித்தனர்.




Wednesday, September 17, 2014

ஆந்திராவில் நமது கலை வழி இறைப்பணி

நமது ஊழியம் மூலமாக கடந்த 6ம் தேதி ஆந்திராவில் உள்ள ஜங்கல் அக்ரகாரம் என்ற பகுதியில் சிறுவர் ஊழியத்திற்காக கடந்து சென்றோம். கர்த்தர் நம்மை அங்கே அற்புதமாய் வழி நடத்தினார். நம்மோடு போக்கஸ் கல்வி நிறுவனர் திரு.பாபு பிரபுதாஸ் அவர்களும் சகோதரர் .பாரத் அவர்களும் கடந்து வந்தனர். ஆந்திராவில் கர்த்தர் நம்மை வல்லமையாய் பயன்படுத்தினார். நமது இறைப்பணி குழுவின் ஊழியர்களான தம்பிகள் மூலம் கர்த்தரின் மகிமை வெளிப்பட்டதை உணர்ந்தோம். பக்கத்தில் இருந்த மலை வாழ் மக்களை சந்தித்து கல்வியில் ஊக்கப்படுத்தும் வண்ணம் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினோம்.











Friday, September 12, 2014

கலை வழி ஊழியம்

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே, கடந்த மாதத்தில் அனேக திருப்பணிகளில் இடைவிடாமல் நமது கிறிஸ்தவ கலை குழு திருப்பணியாற்றினோம், குடியாத்தம் அடுத்த அன்பு உலகம் என்ற இடத்தில் நடந்த வாலிபர் முகாமில் வாலிபர்களுக்கான கலை நிகழ்ச்சிகளை நடத்த நமது குழுவை, ஊழியரும் மீட்பின் பேழை புத்தகத்தின் ஆசிரியருமான திரு.உதயகுமார் அவர்கள் நம்மை அழைத்திருந்தார். அவருடன் அங்கே சென்று மிக சிறப்பான நிகழ்ச்சியை நடத்தினோம். வந்திருந்த வாலிபர்கள் புது ஒளி பெற்றதை உணர்ந்தோம். கர்த்தர் நம்மை அங்கே வல்லமையாய் பயன்படுத்தினார்.

அதை தொடர்ந்து ஆஸ்னாம்பட்டு என்ற கிராமத்தில் கிராம நற்செய்தியை கலை குழு மூலமாக பகிர்ந்துக் கொள்ள அழைத்தார். அங்கும் சென்று கர்த்தருடைய வார்த்தையோடு நமது வரங்களினாலே திரு வசனத்தை கூறி அறிவித்தோம். கிராம மக்கள் கலை வழி ஊழியத்தின் வாயிலாக கிறிஸ்துவின் அன்பை உணர்ந்துக் கொள்ள கடவுள் கிருபை செய்தார். கர்த்தர் நம்மை வல்லமையாய் பயன்படுத்தியதற்காக கர்த்தருக்கு கோடி நன்றிகள்.







உண்மை உபவாச கூடுகை

பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தை பகிர்ந்து கொடுக்கிறதும்.... அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். ஏசாயா.58:7

 கிறிஸ்துவுக்குள் அன்பான  சகோதர சகோதரிகளே .....

திருவசனத்தின் அடிப்படையில் உண்மையான உபவாசத்தை கடைப்பிடிக்க நாங்கள் இணைகிறோம்.  இணைந்துக் கொள்ள உங்களை அழைக்கிறோம். வருகிறவர்கள் ஒருவேளை உணவுக்கான பணத்தை காணிக்கையாக கொண்டு வரவும். முடிந்தவுடன்  காணிக்கை பணத்தில் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு அப்போதே உதவிகள் செய்யப்படும். 

நாள்:  சனிக்கிழமை (13.09.2014 )
இடம்: போக்கஸ் கல்வி நிறுவனம் மகளிர் காவல் நிலையம் எதிரில் , ஆம்பூர்.
நேரம்: மாலை 6:30 மணி முதல் 8 மணி வரை 
ஜெபம் மற்றும் துதி ஆராதனை : அருள்திரு.ஜான் பெர்னார்ட்ஷா & பாஸ்டர்.உதயகுமார் 
தேவ செய்தி: அருள்திரு.Y .கில்பர்ட் ஆசீர்வாதம் .


Saturday, August 16, 2014

உண்மை உபவாச கூடுகை

அன்புக்குரிய  விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள் உங்கள் யாவரையும் மீண்டும் இணையம் வழியாய் சந்திப்பதில் பெரு  மகிழ்ச்சி கொள்ளுகிறேன். நமது உண்மை உபவாச கூடுகை கடந்த 9ம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணியளவில் வெகு சிறப்பாக நடை பெற்றது. அனேகர் வந்து பங்கெடுத்து தனது ஒரு வேளை உணவுக்கான பணத்தை காணிக்கையாக கொடுத்தனர். நமது உதவிகளை பெற்றுக் கொள்ள சகோதரி .....ராணி (முழு பெயர் வேண்டாமே) அவர்கள் பங்கெடுத்து நமது உதவிகளை பெற்று சென்றனர் அவர்கள் வீட்டிற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்களை உதவியாக பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் கணவனை இழந்து எச்.ஐ.வி யோடு போராடி வருகிறார்கள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். முதல் மகள் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறாள். இரண்டாவது மகள் மற்றும் மூன்றாவது மகன் பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள்.

நமது உதவியை பெற்ற சகோதரி இது எனக்கு இறைவன் கொடுத்த பரிசு, நான்கு மாதமாக எந்த வருமானமுமின்றி தவித்த எனக்கு கடவுளே அழைத்து கொடுத்தது போல்  உணர்வதாக கூறினார்கள். நமது சகோதர சகோதரிகளுக்கு அது மன நிறைவை அளித்தது. 

கூடுகைக்கு வராவிட்டாலும் தனது காணிக்கைகளை அனுப்பிய சகோதரி.பிரவீனா (திருப்பத்தூர்) அவர்களுக்கும், எஸ்தர் ஜெபக்குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

 சகோதரிக்காக அனைவரும் ஜெபித்தோம்

சகோதரிக்கு நமது அன்பின் பரிசுகள் 

Friday, July 4, 2014

உண்மை உபவாச கூடுகை

பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தை பகிர்ந்து கொடுக்கிறதும்.... அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். ஏசாயா:58:7

 கிறிஸ்துவுக்குள் அன்பான  சகோதர சகோதரிகளே .....

திருவசனத்தின் அடிப்படையில் உண்மையான உபவாசத்தை கடைப்பிடிக்க நாங்கள் இணைகிறோம்.  இணைந்துக் கொள்ள உங்களை அழைக்கிறோம். வருகிறவர்கள் ஒருவேளை உணவுக்கான பணத்தை காணிக்கையாக கொண்டு வரவும். முடிந்தவுடன்  காணிக்கை பணத்தில் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு அப்போதே உதவிகள் செய்யப்படும். 

நாள்: பிரதி மாதம் முதல் சனிக்கிழமை (5.07.2014 முதல்)
இடம்: போக்கஸ் கல்வி நிறுவனம் மகளிர் காவல் நிலையம் எதிரில் , ஆம்பூர்.
நேரம்: மாலை 5 மணி முதல் 7 மணி வரை 
தேவ செய்தி: அருள்திரு.Y .கில்பர்ட் ஆசீர்வாதம் .

வாருங்கள் கிறிஸ்துவின் அன்பை செயலில் காட்டுவோம்.. 

தொடர்புக்கு: 9944116769

Thursday, April 24, 2014

செயல் வீரர்கள்..

கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பான ஸ்தோத்திரங்கள். கர்த்தருடைய பெரிதான கிருபையினால், நாம் ஜெபத்தோடு திட்டமிட்டபடி இரத்ததான முகாமை கர்த்தர் பெரிய அளவில் ஆசீர்வதித்தார். 67 பேர் பங்கு பெற்று கிறிஸ்துவின் அன்பை செயலில் காட்டி கடவுளை மகிமைப்படுத்தினர். நேரம் தாழ்ந்து வந்த சகோதரர்களை நாம் பயன்படுத்திக் கொள்ள இயலவில்லை. அதற்காக வருந்துகிறேன். நம் முகம் தெரியாத யாரோ ஒரு சகோதர சகோதரியின் உயிர் காக்க நம் இரத்தம் பயன்பட போகிறது. எவ்வளவு மேலான அன்பை நாம் பகிர்ந்துக் கொண்டோம்?? இந்த உண்மையான அன்பில் நம் திருச்சபைகள் வளர நாம் ஜெபிப்போம். பணத்தேவைகளை கர்த்தர் அற்புதமாய் சந்தித்தார்.


அதே போல பல் சிகிச்சை முகாமிலும் 50 க்கும் மேற்பட்டோர் பங்குபெற்று பயன் பெற்றனர்.


கர்த்தர் உயிர்த்தெழுந்த திருநாளன்று எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளோடு ஒரு அன்பின் விருந்தை பகிர்ந்துக் கொண்டோம். அதன் முழு பொறுப்பையும் திரு.பாபு பிரபுதாஸ், திரு.ரஜினி, திரு.தாமஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டு சிறப்பானதொரு விருந்தை ஆயத்தம் செய்தனர். 35 பேர் பங்கு பெற்று பயன் பெற்றனர். திருமதி.பிந்து கிளாட்சன் அவர்கள் ஆலோசனை மையம் மூலம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள். அவர்களுக்கு மாதம் தோறும் சத்து உணவுகள் கொடுக்க தீர்மானித்து ஜெபிக்கிறோம். அதற்காக ஜெபியுங்கள்.

எச்.ஐ.வி யால் தன் பெற்றோரை இழந்து வாடுகிற அனேக பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை நானும், கிறிஸ்துவின் அன்பு என்ற அறக்கட்டளையும், நம்பிக்கை அறக்கட்டளையும் சேர்ந்து பொறுப்பெடுத்துக் கொண்டோம். 5 வயதான பெண் பிள்ளையின் கல்வி மற்றும் அவளது தினசரி தேவைகளை கடந்த 6 மாதங்களாக சந்தித்து வருகிறோம். அவளை ஒரு நல்ல விடுதியில் சேர்த்து படிக்க வைக்க விரும்புகிறோம். அதற்காக ஜெபியுங்கள். இப்படி அனேக பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் தேவைகள் சந்திக்கப்பட ஜெபித்து வருகிறோம் அவர்களுக்காகவும் ஜெபியுங்கள்.

அன்புடன்
Y. கில்பர்ட் ஆசீர்வாதம்.

Thursday, April 10, 2014

இரட்சணிய சிலுவை

இரட்சணிய சிலுவை


அன்பான உடன் சகோதர சகோதரிகளே, நமது ஆண்டவர் சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகளை பலமுறை நான் தியானித்திருக்கிறேன், ஒவ்வொரு முறை தியானிக்கும் போதும், எனக்குள் புதிய சிந்தைகளையும், புதிய ஞானத்தையும் அந்த மகத்துவ வார்த்தைகள் உருவாக்கியிருக்கின்றன. அந்த பேரனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதி தனிப்பட்ட தியானத்திற்கும், ஊழியத்தில் பயன் படுத்தும் வகையிலும் அனேகருக்கு பயன்பட திட்டமிட்டு, ஜெபத்தோடு வெளியிடுகிறேன். வருகிற சனிக்கிழமை முதல் உங்கள் கரங்களில் கிடைக்கும். ஒரு புத்தகத்தின்  விலை ரூபாய். 30

ஆண்டவரின்  வார்த்தைகளை ஆழமாய் தியானிக்க இப்புத்தகம் உங்களுக்கு துணை நிற்கும்.

புத்தகம் பெற அணுக வேண்டிய முகவரி

போக்கஸ் கல்வி நிறுவனம்
 மகளிர் காவல் நிலையம் எதிரில்
ஆம்பூர்.

 தொடர்புக்கு : 9894456269

இரத்ததான முகாம் & பல் சிகிச்சை முகாம்

தலைப்பைச் சேருங்கள்

கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாச உறவுகளே இம்மாதம் 18 ம் தேதி புனித வெள்ளி அன்று நமது இயேசுவின் குரல் மாத இதழ் ஊழியம் வாயிலாக ஒரு மாபெரும் ரத்ததான முகாம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். கடந்த ஆண்டு புனித வெள்ளி  அன்றும்  இதே போல் ஒரு மாபெரும் ரத்த தான முகாம் நடத்தினோம் அப்போது 65 பேர் பங்கு பெற்று  ரத்ததானம் செய்தனர்  இவ்வாண்டு 100 பேரை எதிர் பார்க்கிறோம். வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியிலிருந்து மருத்துவக் குழுவினர் வருகின்றனர். 



முழு உலகை காக்க இயேசு இரத்தம் சிந்திய நன்னாளில் ஒருவரை காக்கவேணும் நாமும் இரத்தம் சிந்துவோம், 

நம் இரத்தம் நம் முகம் தெரியாத ஒரு சகோதரனுக்கு அல்லது சகோதரிக்கு உயிர் கொடுக்கப்போகிறது. இது தானே மெய்யான கிறிஸ்தவ அன்பு? 

அதே நாளில் இலவச பல் சிகிச்சை முகாமும், கல்யாணி ஸ்கேன் மற்றும் டென்டல் கிளினிக் மூலமாக நடைபெறுகிறது வாருங்கள் பயன் பெறுங்கள். 

நாள்:18.04.2014 புனித வெள்ளி 
இடம்: கன்கார்டியா மேல் நிலை பள்ளி, ஆம்பூர். 

வாருங்கள் கிறிஸ்துவின் அன்பை செயலில் 

காட்டுவோம். 

அன்புடன் 
Y. கில்பர்ட் ஆசீர்வாதம் 

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews