WORD OF GOD

WORD OF GOD

Monday, March 21, 2011

வேத வினா விடை போட்டி

வேத வினா  விடை போட்டி இம்முறை வேத விடுகதை போட்டியாக வருகிறது. இந்த முறை வேதவினா போட்டியை வேத விடுகதை முறையில் நமக்கு தொகுத்துக் கொடுத்தவர் எனது சகோதரியும், பெதஸ்தா  மருத்துவமனை தாதியருமான திருமதி. ஜேனட் மேரி  எசேக்கியேல் அவர்கள். 

பதில்களை தள  மின்னஞ்சல் முகவரிக்கோ, அல்லது, தபால் மூலமாக எங்களது முகவரிக்கோ அனுப்புங்கள், உங்களுக்கு, ஆசீர்வாத கீதங்கள் ஆடியோ சிடி பரிசாக காத்திருக்கிறது.

தபால் மூலமாக அனுப்பவேண்டிய முகவரி.

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.   
ஆசீர்வாத இல்லம்
1/343 AB  நகர், செட்டியப்பனூர் போஸ்ட்
வாணியம்பாடி,
வேலூர் மாவட்டம்.

இம்மாத வேத விடுகதைப்போட்டி யோசுவா புத்தத்திலிருந்து.

1. அவன் வாழ்நாள் முழுவதும் அவனை எதிர்த்து நிற்க முடியாது, அவர்
 இருப்பதால். அவன் யார்?

2 . நாங்கள் இருவர். உளவுத் துறையினர். நூனின் மைந்தர்  எங்களை 
அனுப்பினார். விலைமாது வீட்டில் தங்கினோம் அவள்தான் எங்களை தப்புவித்தாள் அவள் பேரென்னவோ? ஊர் என்னவோ?

3 . தேவனின் சேனாதிபதி ஒருவன் நீ நிற்பது தூய்மையான் இடம். அதை கழட்டு என்றான். உடனே கழட்டி எறிந்தான். அது என்ன?

4 . நான்தான் மோசேயின் அடுத்த வாரிசு. தேவாதி தேவனின் பணியாளன்.  சதத்துக்கு மேலே பத்து ரன் எடுத்து அவுட் ஆனேன் 
நான் யார்?  

5 . தமது மக்களுக்கு, தாமே நடுவில் நின்று, தாமே போர் புரிந்து
 அதிசயங்களை காணச் செய்வார். அவர் யார்?

6 . உடைகளை கிழித்துக் கொண்டனர் மாலை வேளை மட்டும் மண்டியிட்டனர். தரையில் புழுதியை போட்டுக் கொண்டு, அதன் முன் கிடந்தனர். அது எது?

7 . கர்த்தருக்கு எதிராய் பாவம்  செய்தேன். கல்லெறியப்பட்டேன் . கற்குவியலில் புதைந்தேன். கர்த்தரின் கோபம் தீர்ந்தது. நான் யார்?

8 . சுட்டு எரிக்கப்பட்ட நகரம் அது. இன்று மட்டும் மண்மேடாகி பாழ்பட்டு கிடக்கிறது. அது எது?

9 . ஒரு கை விரல்கள் நாங்கள். ஓடினோம். ஒரு கெபியில் ஒளிந்தோம். இஸ்ரவேல் புத்திரரிடம் அகப்பட்டோம். ஐந்து மரங்களில் தொங்கி மடிந்தோம் நாங்கள் யார்?

10௦. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து கொண்டு வந்த பொருள் அது. நூறு வெள்ளிப் பணத்தில் வாங்கிய மண்ணில் புதைக்கப்பட்டது. அது எது?


விடைகளை உடனே அனுப்புங்கள்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews