WORD OF GOD

WORD OF GOD

Wednesday, March 23, 2011

பழம்பெரும் பாறை

தியானப் பகுதி ஏசாயா.26 :4 

கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள், கர்த்தராகிய யேகோவா நித்தியா கன்மலையாயிருக்கிறார்.


பாறைகள் அதிக காலங்கள் இருந்து வருகிறது, ஆனாலும் அறிவியல் வல்லுனர்கள் கூறும்போது, பூமியதிர்ச்சி, மழை போன்றவைகள் ஏற்பட்டால், பாறை உடைந்து, மணலாக மாறிவிடுகிறது என்கின்றனர்.

பொதுவாக பாறை ஒரு வலிமையின் சின்னமாக உலக வரலாற்றில் விளங்கி வருகிறது. வேதத்தில் மலை பாறைகள் தான் பாதுகாப்பின் சின்னமாக உள்ளது. (சங்கீதம்.125 )
இஸ்ரவேலர்கள், அசிரியர்களை  வெற்றிக்கொண்ட பொது, கர்த்தரை ஏசாயா புகழ்ந்து பாடுகிறார், கடவுள் தான் வெற்றிக்கு காரணம், அவர் நம்புகிறவர்களை காப்பாற்றுகிறவர், அவர் கன்மலை, நித்திய கண்மலையாய் இருக்கிறார்.

ஜப்பானை வாரி சுருட்டிய சுனாமி போல பெரும்  சுனாமி வந்தாலும், கடவுள் நம்மை, நித்திய கண்மலையாய் இருந்து காப்பார். கவலை வேண்டாம், கலக்கம் வேண்டாம், பதற்றம் வேண்டாம்.

சாத்தானின் சூழ்ச்சி, இயேசு என்ற பாறையை முறியடிக்க முடியவில்லை, நம்முடைய கடவுளே நமக்கு Life Insuranct, and Security. மிக விலையுயர்ந்த   மரத்தை விட நம் இறைவன் சக்தியுள்ளவர், அவர் நம்மை காப்பார்.

இந்த உலகில், எங்கு ஓடுவது நம் பாதுகாப்பிற்கு, யாரை நம்புவது, யாரிடத்தில் அடைக்கலம் புகுவது என்று கேள்விகள் நமக்கு உண்டு. ஆனால் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்புக்கான உத்தரவாதம் கடவுள் மட்டுமே. நமக்கும், நம் உயிருக்கும் அவர்தான் உத்தரவாதம்.

ஒரு சிறப்பு மிக்க பாடல், நான் நிற்கும் பாறை கிறிஸ்துவே, வேர் அஸ்திபாரம் மணலே, அதுபோல பிளவுண்ட மலையே புகலிடம் தாருமே, என்கிற வரிகள், நமக்கு நம்பிக்கையளிக்கிறது. மகிழ்ச்சியோடு இந்நாளை துவங்க நித்திய கன்மலையாகிய  கிறிஸ்து உனக்காய் துணை நிற்கிறார்.


கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews