WORD OF GOD

WORD OF GOD

Thursday, March 31, 2011

காலை மன்னா (வீழ்ந்துப்போன யூதாஸ்)

வீழ்ந்துப் போன யூதாஸ்.

தியான பகுதி மத்தேயு.26 :46 -50 

46. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள் போவோம் என்றார்.

47. அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.

48. அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.

49. உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.

50. இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள் 



சிலுவையின் நாயகனாகிய பாடுபடும் தாசன் இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம். இயேசுவின் சிலுவைப் பாதையில், உதவியோரும் உண்டு, துரோகம் செய்தவர்களும் உண்டு.

இங்கு இயேசுவின் உடன் ஊழியனாகிய யூதாஸ், உடன் உண்டு, உறங்கி, ஒன்றாக வாழ்ந்து இறுதியில் காட்டிக் கொடுத்தான்.

*யூதாஸ் கரியோத்: கிரேக்க வார்த்தை

*யூதேயாவிலிருந்து அழைக்கப்பட்ட ஒரே அப்போஸ்தலன்.

*செலோத்தியன்: தீவிரவாதி .

நாடு சுதந்திரம் அடைய வேண்டும், என்ற ஒரு தாகம், அவனுக்கு இருந்தது.

# ரோம பேரரசை எதிர்த்தவன்:-

லூக்கா.22 :33 , யோவான்.14 :22  ஆகிய வசனங்கள் யூதாசை விமர்சிக்கிறது.

1 . பொய்யன்.

2 . வாள் வைத்திருப்பவன்.

யூதாஸ் இயேசுவால் நம்பி அழைக்கப் பட்டவர்:

சுவிசேஷ பனி செய்வதற்கு இயேசு யூதாசை கூப்பிட்டார். இயேசு ஆண்டவர், நம்மையும் உண்மையுள்ளவர்கள் என்று அழைத்துள்ளார். நாம் இன்று எப்படி நடந்துக்கொள்கிறோம்.

போலித்தனம் பொதிந்த யூதாஸ்:

கவரிங் நகை. தங்கத்தின் போலி. அதேபோல யூதாஸ் ஒரு போலி சீடன். நாமும் போலியாக உள்ளோமா? இரட்டை வாழ்வு வாஹ்கிரோமா?

யோவான்.௧௨:௬ ல் யூதாஸ் திருடன் என்று யோவான் தெளிவாக கூறுகிறார்.

ஆனால் காரினை வள்ளலாகிய இயேசு அவரை 'சிநேகிதனே"  என்று அழைக்கிறார்.
லூக்கா.6 :16  ல் துரோகி என்று சொல்லப்பட்டுள்ளது, ஆனால் இயேசுவோ அவனையும் நம்பித்தான் கூப்பிட்டார்.

இன்று பலர் உண்மையான முகத்தை மறைத்துக்கொண்டு, முகமூடியோடு வாழ்ந்து வருவதை காண முடியும். இதேபோல அன்றைய யூத சமூகத்தின் பெரும் புள்ளிகளும், மதத் தலைவர்களும் போலித்தனமான முக மூடிகளை அணிந்துக்கொண்டு, வாழ்ந்தனர். ஆனால் இயேசுவின் விஷயத்தில்  அவர்களின் சுய ரூபம் வெளிப்பட்டது. உண்மைக்கு சாட்சிக் கொடுத்த இயேசுவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற ஒத்தக் கருத்துடன் செயல் பட்டனர்.

பண ஆசைக்கொண்ட யூதாசை இதற்கு பயன் படுத்திக்கொண்டனர்.

 1தீமோத்தேயு.6;10 ௦  பண ஆசையே எல்லா தீமைக்கும் வேர்.
சிலர் அந்த ஆசையால் விசுவாசத்தை விட்டு மோசம் பொய் அனேக வேதனைகளால் உருவக் குத்திக்கொள்ளுகிறார்கள்.

முத்தத்தால் காட்டிக்கொடுத்தான்:

அன்பின் அடையாளம் முத்தம் அதைக்கொண்டு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். இன்று நாமும் இயேசுவோடு கிறிஸ்தவர்களாக இருந்தும், அவரை காட்டிக் கொடுத்துக்கொண்டும், சிலுவையில் அறைந்துக்கொண்டும் இருக்கிறோம்.

வருந்தினான், மனந்திருந்தவில்லை:

வருத்தப்பட்டான், மனந்திருந்தவில்லை, இயேசுவிடம் வர வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் தோன்றவில்லை. தண்டனையை தானே முடிவு செய்துக்கொண்டான், இயேசுவோ அவனையும் சிலுவையில் மன்னிக்கவே சித்தங்கொண்டார்.

சிலுவை பாதையில் நாம் யார்?



கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews