WORD OF GOD

WORD OF GOD

Wednesday, June 1, 2011

கண்ணீரை துடைக்கும் இயேசு

ஏசாயா.25 :6 -9 


உயிர்த்த கிறிஸ்துவின்  நாமத்தில் ஸ்தோத்திரங்கள். அன்பானவர்களே, அழாதவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை. மனிதன் பிறக்கும்போதும் அழுகிறான், வாழும்போதும் அழுகிறான், இறக்கும்போதும் அழுகிறான். தான் நினைத்த காரியம் நடக்காத பொது, நோய் வறுமை, கடன், இவையெல்லாம் நம்மை அழ வைக்கிறது.

ஆனால் இந்த புதிய நாளில் இயேசு ஆண்டவர் நம்முடைய கண்ணீரைத் துடைத்து, நமக்கு புது வாழ்வு அருளுவார். ஆபிரகாமின் முதல் மனைவி சாராள் குழந்தை இல்லாதவளாய் இருந்தபோது, வேலைக்காரி ஆகாரை பிள்ளை பெற்றுத் தரும்படி ஆபிரகாமுக்கு கொடுத்தாள். பின்பு சாராள் கர்பவதியானதும், ஆகாரை விரட்டியடித்தாள். அப்போது அவள் மன வேதனையோடு வனாந்திரத்தில் வரும்போது, பிள்ளை தாகத்தால் மடிந்துக் கொண்டிருந்த நிலையில் கடவுளை நோக்கி அபயமிட்டாள்.

கடவுள் அவள் கண்ணீரைக் கண்டு அவள் மகனை காப்பாற்றினார். ஆகார்  கடவுளை,  என் கண்ணீரை கண்ட கடவுள் என்று சாட்சியிட்டாள்.

சங்.116 :8  ல் என் கண்ணை கண்ணீருக்கு விலக்கி காத்தார் என்று சங்கீத காரன் சாட்சியிடுகிறார்.

யோபு.16 :20  ல் நம்முடைய நண்பர்கள், நம்மை பரியாசம் பண்ணுகிறபோது கடவுள் அந்த கண்ணீரை துடைத்தார்.

எசேக்கியா அரசன் உண்மையும், உத்தமுமானவர், அவருக்கு நோய் ஏற்பட்ட பொது, மரணம் சம்பவிக்கும் என்று ஏசாயா கூறுகிறார். எசேக்கியா ராஜா அழுதார், இறைவனை நோக்கி கூப்பிட்டார், இறைவன் அந்த கண்ணீரை துடைத்தார், 15  ஆண்டுகள் ஜீவனை கூட்டி கொடுத்தார்.


பிரியமானவர்களே, இவைகள் நமக்கு சாட்சிகள், இயேசு ஆண்டவர் நமது கண்ணீர் துடைக்கவே அவர் கண்ணீர் வடித்தார், இரத்த வேர்வை சிந்தினார், மரணத்தை ஏற்றுக் கொண்டார். நமக்காக அவர் உயிர் கொடுத்து ஆசீர்வாதம் தந்தார். நமது துக்கத்தை சமாதானமாக மாற்றுவார், எனவே கலங்காதே திகையாதே, கர்த்தர் உன் கண்ணீரைத் துடைப்பார். உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்.


கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews