WORD OF GOD

WORD OF GOD

Tuesday, June 14, 2011

சந்தோஷம் பொங்குமே !!!!!!

அன்பானவர்களே, உங்கள் யாவருக்கும் என் இனிய ஸ்தோத்திரங்கள். இன்றைய  தியான வசனம், அப்போஸ்தலர்.8 :8 

அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.


இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு ஏறி போன பிறகு, பரிசுத்தாவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொண்ட அப்போஸ்தலர்கள் அற்புதமான ஊழியத்தை செய்து மக்கள் மத்தியில் கிறிஸ்துவை வல்லமையாய் அறிவித்தனர். இது யூதர்கள் மத்தியில் கடும் பொறாமையை ஏற்படுத்தியது. எனவே அப்போஸ்தலர்களையும், விசுவாசிகளையும் அச்சுறுத்தும் வண்ணம் சவுல் என்பவனை கொண்டு கடுமையான தண்டனைகளை    கிறிஸ்தவர்களுக்கு விசாரணையே இல்லாமல் அளித்தனர். இதனால் கிறிஸ்தவர்கள்  இந்த துன்பங்களிலிருந்து தப்பிக்க, எருசலேமை விட்டு பல இடங்களுக்கு சிதறிவிட்டனர்.

இப்படி சிதறி போனவர்களில் ஒருவர்தான் பிலிப்பு என்பவர். இவர் திருச்சபையின் மூப்பர்களில் ஒருவராக இருந்தவர். இவர் சமாரியாவில் ஒரு பட்டணத்தில் வந்து. அங்கேயும் கிறிஸ்துவை அறிவித்தார். ஏற்கெனவே அவர் பெயரை சொன்னதால் தான் எருசலேமிலிருந்து விரட்டப்பட்டு இங்கே வந்திருக்கிறார். ஆனாலும் அவரால் ஆண்டவரை அறிவிக்காமல் இருக்க முடியவில்லை. அப்படி அவர் அறிவித்ததால் என்ன நடந்தது என்பதைத்தான் இந்த தியான வசனத்தில் காண்கிறோம்.

அவர் அங்கே கிறிஸ்துவை அறிவித்தபோது, அசுத்த ஆவிகள் ஓடின, நோயாளிகள் குணமாக்கப்பட்டார்கள் (வசனம்.7 ).  அதைவிட மேலாக நடந்த மிக முக்கியமான விஷயம் 8  வது வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அது யாதெனில் அந்த பட்டணம் முழுதும் மிகுந்த சந்தோஷம் உண்டானது. அன்பானவர்களே, மெய்யான சந்தோஷம் எங்கே பொங்கி வழியும் தெரியுமா? அவர் வார்த்தைகள் அறிவிக்கப்படுகிற இடத்தில். நீங்கள் இந்த தளம் வழியாக கர்த்தருடைய வார்த்தையை பெற்றுக் கொள்ளுகிற நேரம், நீங்கள் ஆலயத்தில் பிரசங்கம் கேட்கிற நேரம், வீட்டில் ஆண்டவரின் வார்த்தையை வாசிக்கிற நேரம் சந்தோஷம் பொங்கி வழியும் நேரம், கர்த்தருடைய வார்த்தையே மிகுந்த சந்தோஷத்தை தரும்.


எனவே அவர் வார்த்தையை கேட்பதிலும், வாசிப்பதிலும், தியானிப்பதிலும் ஆர்வமுள்ளவர்களாய் மெய்யான மகிழ்ச்சியில் பொங்கி வழிந்து, வாழ பரிசுத்தாவியானவர் வழி நடத்தி காப்பாராக ஆமேன்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews