WORD OF GOD

WORD OF GOD

சிறுவர் ஊழியம்

சிறுவர் கொண்டாட்டம்

அன்பானவர்களே நாம் ஜெபித்தபடி கடவுள் நமது சிறுவர் ஊழியத்தை மிகவும், சிறப்பாய் ஆசீர்வதித்தார். வாணியம்பாடியில் உள்ள கருணை இல்லத்தில் இனிமையாய் துவங்கியது. இந்திய சுவிசேஷ லுத்தரன்  சபையின் முன்னாள் பெருந்தலைவர்  அருள்திரு ராஜகம்பீரம் அவர்கள்  
ஜெபித்து ஆசீர்வதித்து சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதன் புகைப்பட தொகுப்பை கண்டு இறைவனை மகிமை படுத்துங்கள்.

முதல் நிகழ்ச்சி சிறப்பு பாடல் ஜான்சன் மற்றும் குழுவினர்

விடுதி பிள்ளைகள்

சிறப்பு விருந்தினர்கள்


சகோதரி ஜேனட் அவர்கள் கற்றுத்தரும் பாடல்

நிகழ்ச்சியை மெய் மறந்து ரசிக்கும் விருந்தினர்கள்

நாடகம் இயேசு வருகிறார் . ராஜன் மற்றும் குழுவினர்.

செல்வந்தனும் பிச்சைக்காரனும்

செல்வந்தனும் வேலைக்காரனும்

நடனப் பாடல் நானும் குழுவினரும்.


பிள்ளைகளின் உற்சாகம்


சிறுகதை செல்வர் திரு ஏசையன் வழங்கும் சிறுகதை


சாத்தானிடம் சிக்காதே நாடகம். சகோ.ரூபன் மற்றும் குழுவினர்.



நிகழ்ச்சியை குறித்து தைரியமாய் வாழ்த்தி கருத்து சொன்ன குழந்தை

முடிவு ஜெபம் ஆசீர்வாதம்

பரிசு வழங்கல்

தலைமை ஆசிரியர் சா.பிச்சை அவர்கள்

ஆசிரியர் கிருபானந்தராஜ் அவர்கள்


பிள்ளைகளுக்கு பரிமாறப்பட்ட உணவு


கிறிஸ்துவின்  தளபதிகள் (குழுவினர்)



இந்த நிகழ்ச்சி எனக்கு பெரிய மன நிறைவை கொடுத்தது. இது என்னால் மட்டும் சாத்தியமானதல்ல, அனேக உள்ளங்கள் இதற்கு உதவினார்கள். அருள்திரு.ராஜகம்பீரம் அவர்கள், திரு.பாரத் அவர்கள், அருள்திரு.கிளாட்சன் அவர்கள், அருள்திரு.மில்டன் அவர்கள், திரு.சா.பிச்சை அவர்கள், சகோதரி.ஜேனட் அவர்கள், போன்றோர் பொருளாதார ரீதியாக முக மலர்ச்சியாய் உதவி செய்தார்கள். இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. நாளை காலை 10  மணியளவில் வாணியம்பாடியில் உள்ள CMS  விடுதியில் சிறுவர் கொண்டாட்டம் நடைபெறுகிறது. எனவே இதன் தேவைகள் சந்திக்கப்பட ஊக்கமாய் ஜெபியுங்கள்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
 
 

ஏழை சிறுவர்களுக்கு உதவ விருப்பமா?


அன்பான உடன் விசுவாசிகளே, நமது இணைய தளம் ஊழியங்கள் வாயிலாக சிறுவர் ஊழியத்தை துவங்கி வெகு சிறப்பாக இரண்டு விடுதிகளில் நடத்தி முடித்துவிட்டோம். கடந்த நான்காம் தேதி கருணை இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பை தான் நீங்கள் தற்போது கண்டு வருகிறீர்கள், அதே போல கடந்த 7  ம் தேதி வாணியம்பாடியில் உள்ள CMS  விடுதியில் மிக சிறப்பான ஒரு சிறுவர் கொண்டாட்டம், சிறுவர் ஆவிக்குரிய எழுப்புதல் நிகழ்ச்சியை  நடத்தி முடித்துள்ளோம், அதற்கான் புகைப்படங்கள் இன்னும் கிடைக்காததால் இன்னும் அவைகள் பதிவேற்றபடவில்லை.


முதல் நிகழ்ச்சிக்கு அநேகர் உதவி செய்தார்கள். இரண்டாவது நிகழ்ச்சியை நானே கர்த்தருடைய பெரிதான கிருபையால் நடத்தி முடித்தேன். தொடர்ந்து அநேக விடுதிகளிலும், திருச்சபைகளிலும்,  பள்ளிக்கூடங்களிலும் நடத்த  திட்டமிட்டு வருகிறோம், அதே நேரத்தில் தேவைகளும் அதிகமாக உள்ளது. ஒரு நிகழ்ச்சியை நடத்தி முடிக்க சராசரியாக 7000  ரூபாய் தேவைபடுகிறது. அது மட்டுமல்ல இதர தேவைகளும் உள்ளன. உடனடியாக  ஒரு டிஜிட்டல்  கேமரா ,
பப்பட் ஷோ நடத்த பொம்மைகள். தேவைபடுகின்றன. இந்த தேவைகளுக்காக தயவு செய்து ஜெபியுங்கள்.


உங்கள் ஊக்கமான  ஜெபம்தான் என்னை ஊழியத்தில்  இவ்வளவு தூரம் கடந்து வர செய்துள்ளது. தொடந்து ஜெபியுங்கள். உதவ வேண்டும் என்ற ஆர்வம் இருக்குமாயின் எங்கள் ஈமெயில் முகவரிக்கோ, எனது தொலைபேசி எண்ணுக்கோ தொடர்புக்கொள்ளுங்கள்.

email : jesusblessings65@yahoo.in
Mobile: 09894456269


சிறுவர் கொண்டாட்டம் நாயக்கனேரி

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிமையான ஸ்தோத்திரங்கள். நான் ஏற்கெனவே தெறிவித்தபடி, நாயக்கனேரி என்ற மலை கிராமத்தில் நமது சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது.சிறுவர்கள் மட்டுமல்லாது, கிராம பெரியவர்கள், கிராம மக்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்துக்கொண்டு கர்த்தருடைய பெரிதான ஆசீர்வாதத்தை பெற்று சென்றனர். அன்று ஒரு மிகப்பெரிய அற்புதத்தை கர்த்தர் செய்தார் அதை புகைப்படத்தில் நீங்கள் காணலாம். அதன் புகைப்பட தொகுப்பை தொடர்ந்து காணுங்கள், இன்னும் இந்த நிகழ்ச்சி தமிழ் நாடு முழுக்க சிறுவர்களை சென்றடைய தொடர்ந்து ஜெபியுங்கள்.

நிகழ்ச்சியில் இறுதி ஜெபம் செய்த போது ஒரு பெண்மணி அசுத்தாவியால், அலைக்கழிக்கப்பட்டு, நேராக முன்பாக வந்து விழுந்து புரண்டார். எல்லா மக்களும் பிரமிப்போடு கண்டுகொண்டிருக்க, மில்டன் போதகர் ஆவியில் நிரம்பி அவரோடு நாங்கள் அனைவரும் இறைவனிடம் மன்றாட அசுத்தாவி அவரைவிட்டு ஓடிப்போனது, கிராமமே இந்த காட்சியால் இறவனை மகிமைப்படுத்தியது.
 


No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews