WORD OF GOD

WORD OF GOD

Tuesday, July 16, 2013

முன்மாதிரியான போதகர் எப்படி இருக்க வேண்டும்

அன்பான உடன் விசுவாசிகளே, ஒரு முன்மாதிரியான போதகர் எப்படி இருக்க வேண்டும் என வேதாகமம் என்ன சொல்லுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இது திருச்சபையின் சட்டதிட்டமல்ல, எனது கருத்தும் அல்ல, உங்கள் விருப்பத்தின்படியுமல்ல, சர்வவல்ல கடவுளாம் நம் ஆண்டவரின் விருப்பம். ஆம் இவை அனைத்தும் திரு வசனங்களை கொண்டே காண்பிக்கிறேன். 

அதேபோல ஒரு முன்மாதிரியான போதகரை சபை எப்படி நடத்த வேண்டும் என்றும் வேதாகமம் கூறுகிறது அதையும் உங்கள் பார்வைக்குமுன் வைக்கிறேன்.

முன்மாதிரியான போதகர்!!!!!!!

எபேசியர்.4:12-13
12. பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,

13. அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்

I பேதுரு.5:2-3
2. உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,

3. சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.

II தீமோத்தேயு.4:2
2. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

I தெசலோனிக்கேயர்.5:14
14. மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.

I தீமோத்தேயு.5:1-2
1. முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும்,

2. முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும், பாவித்து, புத்திசொல்லு.

I தீமோத்தேயு.3:2
2. ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.

1தீத்து.1:5-9
6. குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்.

7. ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்,

8. அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்தபுத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,

9. ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.

முன்மாதிரியாக இல்லையென்றால்.............???????

எசேக்கியேல்.34:1-10
1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2. மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை; நீ தீர்க்கதரிசனம் உரைத்து அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும்.

3. நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்கிறீர்கள்; கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறீர்கள்.

4. நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்.

5. மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறுண்டுபோனவைகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாயின.

6. என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு, பூமியின்மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை.

7. ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

8. கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள்.

9. ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

10. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு

முன்மாதிரியான சபை எப்படியிருக்க வேண்டும்????? 

எபிரெயர்.10:23-25
23. அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.

24. மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;

25. சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.

எபிரெயர்.13:7

7. தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

I கொரிந்தியர்.11:1

1. நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் (ஊழியரை) பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.

I தீமோத்தேயு.5:19

19. மூப்பனானவனுக்கு (ஊழியருக்கு) விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.

I தெசலோனிக்கேயர்.5:25

25. சகோதரரே, எங்களுக்காக (ஊழியர்களுக்காக) வேண்டிக்கொள்ளுங்கள்.


எபிரெயர்.13:17

17. உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல், சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.

I தீமோத்தேயு.5:17-18

17. நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாக திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.

18. போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.

I கொரிந்தியர்.9:7-14

7. எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்?

8. இவைகளை மனுஷர் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா?

9. போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?

10. நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது.

11. நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?

12. மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும் படுகிறோம்.

13. ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?

14. அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.

கலாத்தியர்.6:6
6. மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன்.

அன்பானவர்களே இதை நம் வாழ்வில் எவ்வளவு பின்பற்றுகிறோம்? திருச்சபைக்கு முன்மாதிரியான ஊழியர் தேவை, ஊழியருக்கு முன்மாதிரியான திருச்சபை தேவை. 



கிறிஸ்துவின் பணியில்..
கில்பர்ட் ஆசீர்வாதம்...

Sunday, July 14, 2013

வாருங்கள் உலகை கலக்குவோம்!!..

அன்பின் சகோதர சகோதரிகளே, தாவீது தேவாலயத்தை கட்ட தீர்மானித்தபோது, ஆலயத்தை கட்டும் பொறுப்பை சாலமோனிடம் ஒப்படைக்க கடவுளே சித்தம் கொண்டார்.கடவுள் தன் மகன் சாலமோனை கொண்டு இதை செய்வார் என்று தாவீது அறிந்தவுடன், அந்த பொறுப்பை தன் மகன் சாலமோனிடம் கொடுத்தான்

1நாளாகமம்.22:11-13 ல் அதை தாவீதே ஒப்புக் கொள்ளுகிறார்.

(வசனங்கள் பொது மொழிபெயர்ப்பிலிருந்து பதிவேற்றியுள்ளேன், நீங்கள் உங்கள் கரத்தில் இருக்கும் வேதாகமத்தை கொண்டு ஒருமுறை படித்து புரிந்துக் கொள்ளுங்கள்)

 (11 தாவீது மேலும், “இப்போது மகனே, கர்த்தர் உன்னோடு இருக்கட்டும், உன் செயல்களில் வெற்றி கிடைக்கட்டும். உனது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தால் ஆலயம் கட்டுவாய். அவர் சொன்னது போலவே கட்டாயம் நீ செய்வாய்.
 12 கர்த்தர் உன்னை இஸ்ரவேலின் அரசனாக்குவார். ஜனங்களை வழி நடத்தவும் கர்த்தருடைய சட்டங்களை மதித்து கட்டுப்பட்டு நடக்கவும் தேவையான ஞானத்தையும், புரிந்துகொள்ளும் திறனையும் தேவனாகிய கர்த்தர் உனக்கு வழங்கட்டும். 
13 நீ வெற்றிமிக்கவனாய் இருப்பாய். இஸ்ரவேலுக்காக கர்த்தர் மோசேயிடம் கொடுத்த கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் நீ கவனமாகக் கீழ்ப்படிய வேண்டும். பலமாகவும், தைரியமாகவும் இரு. பயப்படாதே)

 ஆனால் எல்லா தந்தைக்கும் ஒரு பெலவீனம் உண்டு, அது யாதெனில் தன் பிள்ளைகளுக்குள் எவ்வளவு பெரிய ஆற்றலும் திறமைகளும் இருந்தாலும், அவர்கள் வயது ஏறினாலும், அவர்களை இன்னும் தங்கள் குழந்தைகளாகவே பாவிப்பர், அவர்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைக்க பயப்படுவர். இதே போன்றதொரு பயம் தாவீதிற்கும் வந்துவிட்டது, 

.ஆனாலும், தன் மகன் சாலமோன் அதை சாதிப்பாரா என்ற அச்சம் அவருக்குள் இருப்பதை, 1நாளாகமம்.29:1ல் குறிப்பிடுகிறார்.

29:1 அங்கே கூடியிருந்த அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமும் தாவீது, “என் மகன் சாலொமோனை தேவன் தேர்ந்தெடுத்துள்ளார். அவன் இளைஞன். இந்த வேலையைச் செய்து முடிக்கும் தேவைகளைப் பற்றிய அறிவு இல்லாதவன். ஆனால் இந்த வேலையோ மிகவும் முக்கியமானது. இது ஜனங்களுக்கான வீடு அன்று. இது தேவனாகிய கர்த்தருக்கான வீடு.

எனவே இந்த மனக்குழப்பத்தில் இருந்து தாவீது தப்பிக்க எடுத்த முடிவு, அதே 1நாளாகமம்.29:10 முதல் 12 வரை வசனங்களில் இடம் பெற்றுள்ளது, ஆம் அந்த முடிவு கடவுளை நோக்கி ஜெபிப்பது.

தாவீதின் அழகான ஜெபம்

10 பிறகு தாவீது அனைத்து ஜனங்களின் முன்பாக கர்த்தரை துதித்தான். தாவீது:

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, எங்கள் தந்தையே,
    எல்லா காலங்களிலும் உமக்கு துதி உண்டாவதாக!
11 மாட்சிமை, வல்லமை, மகிமை, வெற்றி, மகத்துவம் அனைத்தும் உமக்குரியவை.
    ஏனென்றால் மண்ணிலும், விண்ணிலும் உள்ள அனைத்தும் உமக்குரியவை.
கர்த்தாவே இராஜ்யம் உமக்குரியது.
    நீரே தலைவர், எல்லாவற்றுக்கும் ஆட்சியாளர் நீரே.
12 செல்வமும், மகத்துவமும் உம்மிடம் இருந்து வரும்.
    நீர் எல்லாவற்றையும் ஆளுகிறீர்.
உமது கையில் வல்லமையும் அதிகாரமும் உள்ளது!
    எவரையும் வல்லமையும், அதிகாரமும் உள்ளவனாக்கும் வல்லமையும் உமது கையில் உள்ளது!

அன்பானவர்களே, தன் மகனை அழைத்து அவன் அறிவுரை சொல்லவில்லை, யாராவது பார்த்துக் கொள்ளுங்கள் என்று யாரிடத்திலும் தன் மகனை ஒப்புக்கொட்டுக்கவில்லை, அவன் எடுத்த ஒரே முடிவு தன் பிரச்சனையை கடவுளிடத்தில் கூறுவதுதான். ஏனென்றால் கர்த்தரால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை, இதை தெளிவாக தாவீது கூறுகிறார் எவரையும் மேனமைப்படுத்தவும், பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். ஆம் பிரியமானவர்களே, சாலோமோன் இளைஞன், இந்த வேலையை செய்யும் அறிவு இல்லாதவன். ஆனால் யாரையும் மேனமைப்படுத்தவும், பலப்படுத்தவும் நம் கர்த்தரால் ஆகும்.

எனவே உங்கள் பிள்ளைகள் சாதிப்பார்களா என்கிற அச்சம் உங்களுக்குள்ளும் இருக்கிறதா? முழங்கால் படியிடுங்கள் நம் சர்வ வல்லவரிடம் சொல்லுங்கள்.

 உங்களை குறித்தே என்னால் ஆகுமா? நான் சாதிப்பேனா? என்று அச்சம் கொள்ளுகிறீர்களா? முழங்காலில் நில்லுங்கள், உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் மேனமைப்படுத்தவும், பலப்படுத்தவும் நம் கர்த்தரால் முடியும்.

சாதாரனமான, பாமரர்களான தன் சீடர்களை கொண்டே இவ்வுலகை கலக்கினவர், இன்று உங்களை கொண்டும் இவ்வுலகை கலக்குவார். ஆமேன்.




கிறிஸ்துவின் பணியில்..
கில்பர்ட் ஆசீர்வாதம்...

Tuesday, July 9, 2013

சந்தேகங்களுடன்..கில்பர்ட் ஆசீர்வாதம்....

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பான ஸ்தோத்திரங்கள், வெகு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை சந்திப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். கர்த்தருடைய பெரிதான கிருபையால் எனது கணிப்பொறியை சரி செய்துவிட்டேன், இனி தொடர்ந்து பதிவுகளையும் துவக்க உள்ளேன். எனக்காகவும் இந்த ஊழியத்திற்காகவும் ஜெபிக்கிற சகோதர சகோதரிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இன்று நான் உங்களோடு பகிர்வதற்காக தெரிந்துக் கொண்ட கடவுளின் வார்த்தை, நியாயாதிபதிகள்.10:30-31.

யெப்தா என்றொரு மனிதரை நீங்கள் கேள்விப்ட்டிருக்கிறீர்களா? இவர் இஸ்ரவேலின் தலைவர்களில் ஒருவர், அவரது பின்னணியும் வரலாறும் சுவாரஸ்யமானது நியாயாதிபதிகள், 10ம் அதிகாரத்திலிருந்து
வாசிக்கும்போது அவரை குறித்த தகவல்களை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம், நான் அவர் செய்த ஒரு பொருத்தனையை குறித்தும் அதை அவர் நிறைவேற்றிய விதம் குறித்தும் உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

இஸ்ரவேலர்களோடு யுத்தம் செய்து வந்த அம்மோன் புத்திரரை எதிர்த்து போரிட யெப்தா புறப்படும் முன் கடவுளிடம் ஒரு பொருத்தணை பண்ணினார் அதைதான் 30 மற்றும் 31ம் வசனத்தில் வாசிக்கிறோம், அவரது பொருத்தணை என்னாவென்றால், கடவுளே நான் அம்மோன் புத்திரரை வென்று சமாதானமாய் வீடு திரும்ப நீர் கிருபை செய்தால், என் வீட்டிற்கு நான் வரும்போது எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அதை நான் கர்த்தருக்கென்று சர்வாங்க தகன பலியாக செலுத்துவேன் என்றான். இங்கே சர்வாங்க தகன பலி என்றால் என்னவென்று நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

லேவியராகமம்.1:1-9 வரை இருக்கக்கூடிய வசனங்களை வாசித்தால் சர்வாங்க தகனபலி என்றால் என்ன என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடியும்.
1கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனை நோக்கி:

2நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்.

3அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக்கூடார வாசலில் கொண்டுவந்து,

4அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,

5கர்த்தருடைய சந்நிதியில் அந்தக்காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.

6பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன்.

7அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப் போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி,

8அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.

9அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

அவன் பொருத்தணை முடித்து போருக்கு புறப்பட்டான், போரில் கர்த்தர் அவனோடிருந்து அம்மோன் புத்திரரை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார், இஸ்ரவேலர் நடுவே ஜெயத்தோடு யெப்தா கம்பீரமாய் தன் ஊருக்கு திரும்பினான், மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டை அவன் நெருங்குகையில் அவன் மகள் தம்புரு வாசித்துக் கொண்டு ஆனந்தமாய் தன் தந்தையை வரவேற்க ஓடி வந்தாள், ஆனால் யெப்தாவோ அதிர்க்கியில் உறைந்தான், காரணம் அவன் செய்த பொருத்தணை. இஸ்ரவேலர்கள் ஒரு பொருத்தணை செய்தால் அதை எக்காலத்திலும் மாற்றிகொள்ளமாட்டார்கள், காரணம் பொருத்தணை செய்தது மனிதனோடு அல்ல கடவுளின் சன்னிதியில், அவரது மேலான நாமத்தில், எப்படி அதை மீற முடியும்??????

அன்பானவர்களே, யெப்தா தன் இருதயத்தை கல்லாக்கி கொண்டான், காரணம் அவனுக்கிருந்தது ஒரே ஒரு மகள், தன் ஒற்றை மகளை, தான் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மீறாமல், அவளை சர்வாங்க தகனபலியாக செலுத்தினான் என்பதை 39 ம் வசனத்தில் நாம் காணலாம்.

எவ்வளவு உணர்வு பூர்வமான மனிதன், கடவுளிடத்தில் தான் செய்த உடன்படிக்கையை மீறாமல் இருக்க அவன் செய்த தியாகம் வர்த்தையில் விளக்ககூடியதல்ல..

ஆனால் நாம் நம் ஞானஸ்னானத்தில் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மீறாமல் இருக்கிறோமா? பிசாசையும் அதின் எல்லா செயல்களையும் விட்டுவிட்டோமா?

நம் திடப்படுத்தலில் செய்த உடன்படிக்கையின்படி திருவிருந்து ஆராதனையை பாவமண்ணிப்பின் நிச்சயமாக விசுவாசித்து அதை அசட்டை செய்யாமல் ஒவ்வோரு திருவிருந்து ஆராதனையிலும் பங்கெடுக்கிறோமா?

நம் திருமணத்தில் நம் கடவுளின் சன்னிதியில், இன்பத்திலும் துன்பத்திலும், வாழ்விலும் தாழ்விலும், ஒருவரில் ஒருவர் அன்பு கூர்ந்து, ஆறுதல்படுத்தி, கண்ணியமாய் எண்ணி ஆதரித்துவரவும், ஜீவனோடிருக்குமளவும் இவரிடம் மாத்திரமே பற்றுதலாய் இருப்பேன் என்றும், மரணம் நம்மை பிரிக்குமளவும், உன்னைவிட்டு விலகாமல் என் கடமைகளில் எல்லாம் உனக்கு உண்மையுள்ள கணவனாக (மனைவியாக) நடந்துக் கொள்வேன் என்று உறுதியளித்துவிட்டு, அந்த உடன்படிக்கையை மீறாமல் இருக்கிறோமா?

நாம் செய்கிற எப்பணியிலும், குறிப்பாய் ஊழியத்திலும் நாம் செய்த உடன்படிக்கையை மீறாமல் இருக்கிறோமா?

ஆனால் நம் கடவுள் மட்டும் அவர் உடன்படிக்கையை காத்து நம்மை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து மேன்மைபடுத்த வேண்டும் அப்படித்தானே.... சந்தேகங்களுடன்...

கிறிஸ்துவின் பணியில்..
கில்பர்ட் ஆசீர்வாதம்...

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews