WORD OF GOD

WORD OF GOD

Monday, April 20, 2020

உலகை இயக்குவது யார்

அன்பானவர்களே உலகை இயக்குவது  யார் என்ற தலைப்பில் சுருக்க தியானம்  கேட்டு கர்த்தரை மகிமைப்படுத்துவோம்.. 




Saturday, June 15, 2019

துனபத்தின் நடுவே வெற்றி

அன்பான உடன் விசுவாசிகளுக்கு நீ...........................ண்ட நாளுக்கு பின் என் அன்பான ஸ்தோத்திரங்கள், மீண்டும் உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி,


தற்போது சென்னையில் தண்ணீர் பஞ்சம் மிக கடுமையான பாதிப்புகளை உண்டாக்கி வருவதை அனைவரும் அறிவோம், உணவகங்கள் போதுமான தண்ணீர் இன்றி மூடப்பட்டுள்ளன, பல தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, வீட்டு வாடகை இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது, பலர் வீடுகளை காலி செய்ய துவங்கியுள்ளனர், அனைத்து ஏரிகளும் வற்றிவிட்டது,

இப்படியொரு பஞ்ச காலத்தை இத்தலைமுறை இப்போதுதான் காணும், இதற்கு முந்தய தலைமுறைகளில் பஞ்சம் ஏற்பட்டதை வரலாறுகளில் அறிந்திருந்தாலும், இவ்வளவு வளர்ந்த நவீன காலத்தில் ஓர் பஞ்சம் என்பது இத்தலைமுறைக்கு நிச்சயம் புதிது.

ஆதியாகமம், 26 ம் அதிகாரம் 1ம் வசனத்தில், ஈசாக்கின் காலத்தில் ஒரு பஞ்சம் ஏற்படுகிறது, ஆபிரகாமின் காலத்தில் பல முறை பஞ்சம் ஏற்பட்டதுண்டு, ஆனால் ஆபிராகாம் என்ற சீமானின் மகன் ஈசாக்கின் காலத்தில் இது முதல் முறை, அதுவும் தன் தந்தையை இழந்த பின் இப்படியொரு சவாலை ஈசாக்கு சந்திக்கிறார், என்ன செய்வது? அடுத்து என்ன திட்டம் வகுப்பது என்றெல்லாம் சிந்திப்பதற்கு முன் அடுத்த வசனத்தில் கர்த்தர் வந்து நிற்கிறார்,

ஆம் கர்த்தர் நமக்கு மட்டுமல்ல நமக்கு அவர் வாக்களித்த சந்ததிக்கும் கர்த்தர்.  நாம் இல்லாத காலத்திலும்,  நம் சந்ததிகளை நமக்கு கொடுத்த வாக்கின்படியே காப்பவர்,  தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்று வாக்களித்தவர் அல்லவா??

அந்த வாக்குதத்தங்களின்படி ஈசாக்கை சந்தித்தவர் ஈசாக்குக்கு ஒரு அதிர்ச்சியான கட்டளையை கொடுக்கிறார், அது யாதெனில், நீ எகிப்திற்கு போக கூடாது!!!! ஏன்?? எப்போது பஞ்சம் வந்தாலும் இஸ்ரவேலர் எகிப்திற்கு போவது வழக்கம், ஏனெனில், அங்கே வற்றாத ஜீவ நதியான நைல் நதி உள்ளது. ஏனவே பஞ்சம் பிழைக்க எகிப்து ஒரு சரியான இடம், ஆனால் கர்த்தர் ஈசாக்கை எகிப்துக்கு போகவிடாமல் தடுத்து, அங்கேயே இருக்க கூறுகிறார்.

கடவுள் சில நேரம் நம் துன்பத்திற்கு தீர்வை தராமல், துன்பத்தின் நடுவே வாழ சொல்லுகிறார். ஆபிரகாமின் மறு மனையாட்டியான ஆகார் கருவுற்ற போது அவளை துன்புறுத்தி சாராள் விரட்டியடித்தாள், எங்கே போவது என்று திக்கு தெரியாமல் தவித்த ஆகாரை மீண்டும் சாராளிடத்தில் போ என்று அனுப்பி வைத்தவர் கர்த்தர். ஏன் அப்படி செய்கிறார்???

துன்பத்தை கண்டு பயந்து ஓடுவதற்கு நாம் இந்த பிரபஞ்சத்தின் பிள்ளைகள் அல்ல, கர்த்தருடைய பிள்ளைகள். ஆம் அதே பஞ்சம் நிறைந்த தேசத்தில் ஈசாக்கு விதை விதைத்தான் அது நூறு மடங்கு பலன் தந்தது என்று 12ம் வசனம் கூறுகிறது. துனபத்தின் நடுவே நம்மை வெற்றி பெற செய்வதே நம் சர்வ வல்லவரின் மகத்துவம்.

இந்த வெற்றியை நாம் ருசிக்க வேம்ண்டுமானால் நாம் இரண்டு ஆவிக்குரிய யுக்திகளை அரிந்துக் கொள்ள வேண்டும் என்று எபிரேயர்.6:11 கூறுகிறது அது என்னவெனில்
1. விசுவாசம்
2. நீடிய பொறுமை.

கர்த்தர் சொன்ன தேசத்தில் ஈசாக்கு விசுவாசத்தோடு விதை விதைத்தான் பொறுமையோடு விளைச்சலுக்காக காத்திருந்தான். 100 மடங்கு பலன் பெற்றான்.

கர்த்தர் சொன்னபடியே சாராளின் வீட்டில் விசுவாசத்தோடும் நீடிய பொறுமையோடும் வாழ்ந்து ஈசாக்கின் ஆசீர்வாதத்தை இஸ்மவேலுக்கும் பெற்றுக் கொண்டாள் ஆகார்.


நாம் எப்படி??? துனபம் வந்ததும் பதட்டப்பட்டு அவசரப்பட்டு கர்த்தரை மறுதலிக்கிறோமா? அல்லது விசுவாசத்தில் நிலைத்திருந்து பொறுமையோடு கர்த்தரின் நாளுக்காக காத்திருக்கிறோமா???

அனபானவர்களே, இந்த காலை எத்தனை துனபங்கள் உங்களை சூழ்ந்திருந்தாலும் அந்த துனபத்தின் நடுவேதான் கர்த்தர் உங்களை ஜெயமாக நடத்த போகிறார்.  ஆம் சங்கீதம் 31: 19 கூறுகிறது, அவர்கள் ஆபத்து காலத்தில் வெட்கப்பட்டு போகாதிருந்து, பஞ்ச காலத்தில் திருப்தியடைவார்கள் என்று. இந்த விசுவாசத்தோடு இந்நாளை துவங்குங்கள் இந்த நாள் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகும்

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews