WORD OF GOD

WORD OF GOD

Saturday, August 16, 2014

உண்மை உபவாச கூடுகை

அன்புக்குரிய  விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள் உங்கள் யாவரையும் மீண்டும் இணையம் வழியாய் சந்திப்பதில் பெரு  மகிழ்ச்சி கொள்ளுகிறேன். நமது உண்மை உபவாச கூடுகை கடந்த 9ம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணியளவில் வெகு சிறப்பாக நடை பெற்றது. அனேகர் வந்து பங்கெடுத்து தனது ஒரு வேளை உணவுக்கான பணத்தை காணிக்கையாக கொடுத்தனர். நமது உதவிகளை பெற்றுக் கொள்ள சகோதரி .....ராணி (முழு பெயர் வேண்டாமே) அவர்கள் பங்கெடுத்து நமது உதவிகளை பெற்று சென்றனர் அவர்கள் வீட்டிற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்களை உதவியாக பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் கணவனை இழந்து எச்.ஐ.வி யோடு போராடி வருகிறார்கள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். முதல் மகள் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறாள். இரண்டாவது மகள் மற்றும் மூன்றாவது மகன் பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள்.

நமது உதவியை பெற்ற சகோதரி இது எனக்கு இறைவன் கொடுத்த பரிசு, நான்கு மாதமாக எந்த வருமானமுமின்றி தவித்த எனக்கு கடவுளே அழைத்து கொடுத்தது போல்  உணர்வதாக கூறினார்கள். நமது சகோதர சகோதரிகளுக்கு அது மன நிறைவை அளித்தது. 

கூடுகைக்கு வராவிட்டாலும் தனது காணிக்கைகளை அனுப்பிய சகோதரி.பிரவீனா (திருப்பத்தூர்) அவர்களுக்கும், எஸ்தர் ஜெபக்குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

 சகோதரிக்காக அனைவரும் ஜெபித்தோம்

சகோதரிக்கு நமது அன்பின் பரிசுகள் 

Friday, July 4, 2014

உண்மை உபவாச கூடுகை

பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தை பகிர்ந்து கொடுக்கிறதும்.... அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். ஏசாயா:58:7

 கிறிஸ்துவுக்குள் அன்பான  சகோதர சகோதரிகளே .....

திருவசனத்தின் அடிப்படையில் உண்மையான உபவாசத்தை கடைப்பிடிக்க நாங்கள் இணைகிறோம்.  இணைந்துக் கொள்ள உங்களை அழைக்கிறோம். வருகிறவர்கள் ஒருவேளை உணவுக்கான பணத்தை காணிக்கையாக கொண்டு வரவும். முடிந்தவுடன்  காணிக்கை பணத்தில் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு அப்போதே உதவிகள் செய்யப்படும். 

நாள்: பிரதி மாதம் முதல் சனிக்கிழமை (5.07.2014 முதல்)
இடம்: போக்கஸ் கல்வி நிறுவனம் மகளிர் காவல் நிலையம் எதிரில் , ஆம்பூர்.
நேரம்: மாலை 5 மணி முதல் 7 மணி வரை 
தேவ செய்தி: அருள்திரு.Y .கில்பர்ட் ஆசீர்வாதம் .

வாருங்கள் கிறிஸ்துவின் அன்பை செயலில் காட்டுவோம்.. 

தொடர்புக்கு: 9944116769

Thursday, April 24, 2014

செயல் வீரர்கள்..

கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பான ஸ்தோத்திரங்கள். கர்த்தருடைய பெரிதான கிருபையினால், நாம் ஜெபத்தோடு திட்டமிட்டபடி இரத்ததான முகாமை கர்த்தர் பெரிய அளவில் ஆசீர்வதித்தார். 67 பேர் பங்கு பெற்று கிறிஸ்துவின் அன்பை செயலில் காட்டி கடவுளை மகிமைப்படுத்தினர். நேரம் தாழ்ந்து வந்த சகோதரர்களை நாம் பயன்படுத்திக் கொள்ள இயலவில்லை. அதற்காக வருந்துகிறேன். நம் முகம் தெரியாத யாரோ ஒரு சகோதர சகோதரியின் உயிர் காக்க நம் இரத்தம் பயன்பட போகிறது. எவ்வளவு மேலான அன்பை நாம் பகிர்ந்துக் கொண்டோம்?? இந்த உண்மையான அன்பில் நம் திருச்சபைகள் வளர நாம் ஜெபிப்போம். பணத்தேவைகளை கர்த்தர் அற்புதமாய் சந்தித்தார்.


அதே போல பல் சிகிச்சை முகாமிலும் 50 க்கும் மேற்பட்டோர் பங்குபெற்று பயன் பெற்றனர்.


கர்த்தர் உயிர்த்தெழுந்த திருநாளன்று எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளோடு ஒரு அன்பின் விருந்தை பகிர்ந்துக் கொண்டோம். அதன் முழு பொறுப்பையும் திரு.பாபு பிரபுதாஸ், திரு.ரஜினி, திரு.தாமஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டு சிறப்பானதொரு விருந்தை ஆயத்தம் செய்தனர். 35 பேர் பங்கு பெற்று பயன் பெற்றனர். திருமதி.பிந்து கிளாட்சன் அவர்கள் ஆலோசனை மையம் மூலம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள். அவர்களுக்கு மாதம் தோறும் சத்து உணவுகள் கொடுக்க தீர்மானித்து ஜெபிக்கிறோம். அதற்காக ஜெபியுங்கள்.

எச்.ஐ.வி யால் தன் பெற்றோரை இழந்து வாடுகிற அனேக பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை நானும், கிறிஸ்துவின் அன்பு என்ற அறக்கட்டளையும், நம்பிக்கை அறக்கட்டளையும் சேர்ந்து பொறுப்பெடுத்துக் கொண்டோம். 5 வயதான பெண் பிள்ளையின் கல்வி மற்றும் அவளது தினசரி தேவைகளை கடந்த 6 மாதங்களாக சந்தித்து வருகிறோம். அவளை ஒரு நல்ல விடுதியில் சேர்த்து படிக்க வைக்க விரும்புகிறோம். அதற்காக ஜெபியுங்கள். இப்படி அனேக பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் தேவைகள் சந்திக்கப்பட ஜெபித்து வருகிறோம் அவர்களுக்காகவும் ஜெபியுங்கள்.

அன்புடன்
Y. கில்பர்ட் ஆசீர்வாதம்.

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews