WORD OF GOD

WORD OF GOD

Wednesday, February 2, 2011

அறிவிப்புகள்

அன்பான தள நண்பர்களே, உங்கள் மகத்தான ஆதரவுக்கு நன்றி தொடர்ந்து என்னை மினஞ்சல் (email) வழியாக தொடர்புக் கொண்டு வாழ்த்தி வருவதற்கு நன்றிகள், உலகம் முழுக்க இதை அறிமுகப்படுத்தி வருகிற நண்பர்களுக்கு என் நன்றிகள். உங்கள் கருத்துக்களை நேரடியாக தளத்திலேயே வெளியிடுங்கள், அது தளத்தை பார்வையிடும் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

உங்கள் ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சல் வழியாகவோ, கருத்துரைகள் வழியாகவோ தெரியப்படுத்தினால், உங்களுக்காக ஜெபிக்க ஆயத்தமாக இருக்கிறோம்.

உங்களுடைய கவிதைகள், கதைகள், அனுபவங்கள் சாட்சிகள் போன்றவை அடுத்தவருடைய விசுவாசத்தை தூண்டும் வகையில் இருக்குமாயின் எங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் அவைகள் பதிவேற்றப்படும். jesusblessings65@yahoo.in.

வேதாகமத்தை பற்றியோ, வசனங்களை பற்றியோ  கேள்விகள் இருக்குமாயின் எங்களுக்கு எழுதுங்கள் இறையியல் பூர்வமாக உங்களுக்கு பதிலளிக்கப்படும்.

இதுபோன்ற விசுவாச ஊழிய தளம் வழியாக நீங்கள் என்ன எதிர்பார்கிறீர்கள் என்பதையும், எப்படியெல்லாம் இதை இன்னும் இயேசுவின் நாம மகிமைக்காக பயன்படுத்தலாம் என்பதை பற்றிய உங்கள் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.
jesusblessings65@yahoo.in

காலை மன்னா 2.02.2011

அனபானவர்களே இந்த காலை நம்மோடு இறை செய்தியை பகிர்ந்துக்கொள்ள போகிறவர் எனது நண்பரும் போதகருமான அருள்திரு மில்டன் அவர்கள், இனி ஒவ்வொரு புதன் கிழமையும் அருள்திரு மில்டன் அவர்கள் இறை செய்தியை பகிர்ந்துக் கொள்வார்கள்.


பத்திரமாக வீடு திரும்புவோம்
சங்கீதம்.107 :23 -26 

23. கப்பலேறி கடல் யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களில் தொழில் செய்கிறார்களே.

24. அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும் ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.

25. அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.

26. அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது
 

அன்பான ஆண்டவருடைய பிள்ளைகளே, காலை வணக்கம்.

நாம் தினந்தோறும் நம்முடைய பணிக்காக வெளியில் சென்று, பணியை முடித்து எத்தனை பேர் பத்திரமாக வீடு திரும்புகிறோம்?

எண்ணில்லா ஆபத்துகள் நம்மை சுற்றி நடந்துக் கொண்டுதான் இருக்கிறது, தீவிரவாதிகள், குண்டு போட்டு உயிர்களை கொல்லுகிறார்கள் , பெரிய விபத்துக்கள் நடக்கிறது, இதனால் நாம் பயப்படுகிறோம்.

எதிர்காலத்தை நினைத்து பயம்:

நாம் அனைவருமே எதிர்கால வாழ்வை எண்ணி பயப்படுகிறோம். நம்மால் எவ்வாறு சுகமாக வாழ முடியும்? என்று நம்பிக்கையில்லாமலே வாழ்கிறோம்.
சங்கீதம்:107:23-26ல்  கப்பல் பயணத்தைப் பற்றி, கூறுகிறார். கப்பல் பயணம் என்பது, ஆபத்து நிறைந்தது, புயல், ஆழம், அலை போன்ற பெரிய ஆபத்துக்கள் நிறைந்தது, கடலில் பயணம் செய்கிறவர்கள் பயந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்போது என்ன ஆபத்து வரும் என்று தெரியாது..

1912  ம்  ஆண்டு ஜெர்மன் தேசத்திலிருந்து புறப்பட்ட பெரிய பிரம்மாண்டமான கப்பல் TITANIC , மூழ்காத கப்பல் என்று சொல்லப்பட்டது, ஆனால் பயணம் செய்த சில நாட்களிலேயே பனி பாறையில் மோதி மூழ்கியது, அநேகர் மரித்துபோனார்கள்.

ஆனால் நம்முடைய வாழ்க்கை பயணத்தில், நாம் பயணம் செய்கிற கப்பலை இயக்குகிறவர் இயேசு ஆண்டவர், அவர் நம்மை பத்திரமாக கரை சேர்ப்பார், பயப்பட வேண்டாம், மழை, புயல், பெரிய அலை, பனிபாறைகள் இது போல் நம் வாழ்வில் பிரச்சனைகள், பயம், தனிமை, மரணம், கைவிடப்படல், நோய், கவலை, . போன்ற பல பிரச்ச்சனைகளிலிருந்து கடவுள் நம்மை வழி நடத்துவார். வீட்டிற்கு நம்மை பத்திரமாக கொண்டு வந்து சேர்ப்பார்,.

எபிரெயர்:6 :17 -19 விசுவாசம் என்பது  நங்கூரம் போல் காணப்பட வேண்டும், என்று சொல்லபடுகிறது.

நிலையான நம்பிக்கை:

நம்முடைய நிலையான நம்பிக்கை ஆண்டவராகிய இயேசுவின் மீது, வாழ்க்கை என்னும் படகில் இயேசு நம்மோடு பயணிக்கிறார், நம் விசுவாசம் நங்கூரம் போல் காணப்பட வேண்டும்.

ஏசாயா:33:20-22 ன் படி கடவுள் நம்முடைய நியாயாதிபதி, அரசன், அவர் நம்மை இரட்சிப்பார். ஆகவே பயப்படாமல் இந்த புதிய மாதத்தில் பயணம் செய்வோம். கடவுள் நம்மோடு இருக்கிறார், அவருடைய வாக்குத்தத்தத்தில் நம்பிக்கை வைப்போம், கடவுளின் வார்த்தை நிலையானது மாறாதது.

கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவுக்குள்ளாக
அருள்திரு, மில்டன் அருண்ராஜ் BA,BTh
revmilton1982@gmail.com

Tuesday, February 1, 2011

காலை மன்னா 1.02.2011

அன்பானவர்களே  இந்த புதிய வருடத்தின்,  இரண்டாவது மாதத்தின் முதல் நாளில் உங்களை இந்த ஊடகம் வழியாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நல்ல நாளில் உங்களோடு பகிர்ந்துக்கொள்ள எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை 1யோவான்.2 :1

என் அருமை பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாத படி, இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன், ஒருவன் பாவம் செய்வானானால், நீதிபரரான இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவினிடம் பரிந்து பேசும் சகாயர்.
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி நமக்கு அனேக விஷயங்கள் தெரியும், அவரை பற்றி உங்களுக்கு என்னெவெல்லாம் தெரியும் என்று கேட்டால், நீங்கள் அனேக விஷயங்களை மிக அழகாக கோர்வையாக  உடனே சொல்லி விடுவீர்கள், பொதுவாக அவரை ரட்சகர், மீட்பர், அதிசயமானவர், நன்மை செய்பவர், மெய்யான மனிதன், மெய்யான கடவுள், இப்படி அனேக விஷயங்களை சொல்லுவோம், ஆனால் அவர் நமக்காக பரிந்து பேசுகிறவர் என்பதை  எத்தனை பேர் சொல்லுவோம் என்று தெரியாது, காரணம் அதை பற்றி நாம் யோசிப்பதில்லை, ஆனால் இயேசு கிறிஸ்துவை பற்றிய நம்பிக்கையில், அவர் நமக்காக பரிந்து பேசுகிறவர் என்பது மிக முக்கியம்.

நம்முடைய ஆண்டவர் இந்த உலகத்தில் சுற்றி திரிந்த காலமெல்லாம் நன்மை செய்பவராகவே சுற்றி திரிந்தார், தனது வல்லமைகள்  அனைத்தையும் நன்மை செய்வதற்காகவே பயன்படுத்தினார். அதுமட்டுமா தன் பரிசுத்தமான உடலையும், விலைமதிப்பில்லா அவருடைய ஜீவனையும், அற்ப பாவிகளான நமக்காக கொடுத்தார். இப்படி இந்த உலகில் வாழ்ந்த போது நமக்காகவே செயல் பட்டவர் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

உயிர்த்தெழுந்த பிறகு பரலோகத்துக்கு போன ஆண்டவர் அங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்றால் பிதாவின் வலது பக்கம் நின்று  நமக்காகவும், நம்முடைய பாவங்களுக்காகவும் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார், அதாவது பரத்துக்கு ஏறின பிறகும் நமக்காக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்.

பல நேரங்களில் எனக்காக பரிந்து பேச யார் இருக்கிறார்கள்? எனக்கு நன்மை செய்ய யார் இருக்கிறார்கள், என்று கலங்கி நிற்கிறோம் ஆனால் இந்த வசனம் தெளிவாக சொல்லுகிறது அவர் நமக்காக 24 மணி நேரமும் பரிந்து பேசி நமக்கான நன்மைகளை கடவுளிடமிருந்து பெற்று தருகிறார். நமக்காக இன்னும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்.

எனவே இந்த புதிய மாதத்திலும் நம் ஆண்டவர் நமக்காக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார், நாம் சந்திக்கும் சவால்கள், போராட்டங்கள் எல்லாவற்றிலும் நமக்காக நம் பக்கம் துணை நிற்பார், மாத்திரமல்ல நாம் தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் பாவங்களிலிருந்து நமக்காக பிதாவிடம் பரிந்து பேசி நம்மை ரட்சிப்பார்.

எனவே தைரியமாய் விசுவாச மிகுதியோடு இந்த மாதத்தை துவங்க  கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews