WORD OF GOD

Wednesday, February 3, 2016
Tuesday, February 2, 2016
ஆராதனை ஆசீர்வாதம்
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே, உங்கள் யாவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
கிறிஸ்தவர்களாகிய நாம் அனேக ஆராதனைகளை கடைபிடிக்கிறோம். மாதத்தின் முதல் நாள் ஆராதனை, ஞாயிறு ஆராதனை, சில திருச்சபைகளில் புதன் ஆராதனை, சில திருச்சபைகளில் வெள்ளி ஆராதனை, விடுமுறைகளில் கூட ஏதாவது ஒரு ஆராதனை உபவாச ஆராதனை அல்லது முழு இரவு ஆராதனை போன்றவைகளை கடை பிடிக்கிறோம், இது போதாதென்று வீடுகள் தோறும் குடும்ப ஜெபக்கூட்டங்கள் என்று குடும்ப ஆராதனைகளை நடத்துகின்றோம். எவ்வளவோ சிரமங்கள் எத்தனையோ பணிகள் நடுவே இவைகளை நடத்துகின்றோம்.
என் இப்படி ஆராதனைகளை நடத்த வேண்டும்? நடத்துவதால் என்ன பலன்?
சங்கீதம்.27:4 ல் தாவீது, கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். என்று கூறுகிறார்,
ஒன்றே ஒன்றுதான் அது நான் உம்மை ஆராதிக்க வேண்டும் என்கிறார். ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை ஆராதிக்க வேண்டும் என்கிறார்.
2.சாமுவேல்.6:15-16 ல் தாவீது கர்த்தருடைய பெட்டகத்திற்கு முன்னால் ஆடி பாடி நடனமாடி இறைவனை ஆராதிக்கின்றார். எவ்வளவு பெரிய காரியம்.. சவுலின் மகள் இதை கண்டு அவமதித்த போதும் அதை பொருட்படுத்தாமல் இறைவனை ஆராதிக்கின்றார். நாமோ சில நேரங்களில் வேதாகமத்தை எடுத்துக் கொண்டு ஆராதனைக்கு வருவதற்கு கூட வெட்கப்படுகிறோம்.
மீண்டும் அதே கேள்வி அப்படியென்ன ஆராதனை அவசியமாகிறது?
யாத்திராகமம.23:25 ல் கடவுள் மூலமாக கானானுக்கு போகிற தம் மக்களுக்கு கூறுகிற செய்தி என்னவென்றால்.
"உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்".
இந்த வசனத்தில் தான் ஆராதனையின் மகத்துவம் வெளிப்படுகிறது. நாம் அவரை ஆராதித்தால் நம் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை கடவுள் வெளிப்படுத்துகின்றார்.
நாம் அவரை ஆராதிக்கும் போது நம் வீட்டு உணவையும் தண்ணீரையும் ஆசீர்வதிக்கின்றார். இன்று உணவு கிடைக்கிறது ஆனால் நாம் தான் நமக்கு மாறுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அதே போலதான் தண்ணீர். இன்று சுத்தமான தண்ணீரின் விலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் ஒரு டி கடையில் தண்ணீர் கேட்டால் ஒரு பெரிய பாத்திரத்தில் அள்ளி கொடுப்பார் இன்று 20 ரூபாய் கொடுத்தால் தான் ஒரு லிட்டர் தண்ணீர் கொடுக்கிறார். சுத்தமான தண்ணீர் கிடைப்பது அவ்வளவு போராட்டமாக உள்ளது. ஆனால் அவரை ஆராதிப்பவர்களுக்கு உணவையும் தண்ணீரையும் கடவுள் ஆசீர்வதிக்கிறார். அதுமட்டுமல்ல நம் பலவீனங்களை நம்மை விட்டு விலக்குகின்றார். உண்மை தானே நாம் ஒரு ஜெபத்திலோ, அல்லது ஆலய ஆராதனையிலோ, அல்லது ஒரு நற்செய்தி கூட்டத்திலோ தானே அற்புதங்கள் நடக்கிறது .
எனவே தான் அராதனைகள் நம் வாழ்வில் நம்மை விட்டு பிரிக்க முடியாத அங்கமாக மாறுகிறது. எனவே எக்காரியத்திலும் அவரை ஆராதிப்பது நம் வாழ்வில் நாம் பெற்றுக் கொள்ளும் மிகப்பெரிய ஆசீர்வாதம். எனவே தான் ஒரு மாதத்தை, ஒரு வாரத்தை, ஒரு வருடத்தை, ஆராதனையோடு துவக்குகிறோம்.
இன்று அவரை ஆராதித்து துவங்கினால் அவர் நம்மோடிருந்து நம்மை ஆசீர்வதித்து நம் பலவீனங்களை நம்மை விட்டு விளக்குகிறார்.
ஆராதிப்போம் நம் ஆண்டவரை ஆசீர்வாதமான வாழ்வை பெற்று மகிழ்வோம்.

Thursday, April 2, 2015
இரத்ததான முகாம் - 2015
கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளே, வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டாக நமது மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற உள்ளது. இதுவரை நமது இரத்ததான முகாம் வழியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கெடுத்து இரத்ததானம் செய்துள்ளனர். இந்த ஆண்டு 100 பேரை எதிர்பார்க்கிறோம். கிறிஸ்து நம்மை காக்க தன் இரத்தம், சதை, உடல், உயிர் யாவும் கொடுத்தாரே, அவரது நாமத்தை பின்பற்றும் நமக்கு இந்த அன்பை பகிர்ந்துக் கொள்ள கட்டளை கொடுத்திருக்கிறாரே.
பெயரில் அல்ல செயலில் கிறிஸ்தவர்களாய் வாழ்வோம் வாருங்கள்..
நாள்: 03.04.2015 புனித வெள்ளி அன்று.
இடம்: கன்கார்டியா மேல் நிலை பள்ளி - ஆம்பூர்
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
அன்பானவர்களே ஞாயிற்று கிழமைக்கான பிரசங்க வாக்கியத்தை நாம் முன்னதாகவே தியானிப்போம் . திரு வசனங்கள்: சங்கீதம்.112 ...
-
வேத வினா விடை போட்டி இம்முறை வேத விடுகதை போட்டியாக வருகிறது. இந்த முறை வேதவினா போட்டியை வேத விடுகதை முறையில் நமக்கு தொகுத்துக் கொடுத்தவர் எ...
உங்கள் இதயம் தொட்டவை
-
செல்வபுரி அந்த ஊரின் பெயர். ஆனால் வறுமை தாண்டவமாடியது. காடு சுற்றுவார்கள், கடுமையாய் உழைப்பார்கள். உண்ண உணவும், உடுக்க உடையும், படுக்க இடமும...
-
Hi kutties today we will learn the second lesson from the New Testament. Read and share it to your friends. One day the king's messeng...
-
அன்பான உடன் விசுவாசிகளே உங்கள் யாவரையும் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதற்காக வருந்துகிறேன் , நான் தற்போது D.C ....