WORD OF GOD

WORD OF GOD

Saturday, June 4, 2011

ஜெபத்தை கர்த்தர் கேட்டருளினார்



கிறிஸ்துவுக்குள் இனிமையாய் நேசிக்கப்பட்ட எனது அன்பிற்குரிய உடன் விசுவாசிகளே, என் நெஞ்சில் நிறைந்த என் வாசக நண்பர்களே. உங்களுக்கு இந்த காலை வேளையில் கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற  நாமத்தில் ஸ்தோத்திரங்கள். நமது ஜெபத்தை கர்த்தர் கேட்டருளினார். இன்று நாம் எதிர்பார்த்தப்படி சிறுவர் ஊழியத்தை துவங்க  தேவன் எல்லா கதவுகளையும் விசாலமாய் திறந்துவிட்டார். இன்று காலை 10  மணிக்கு கருணை இல்லம் என்ற அநாதை மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் நமது முதல் சிறுவர் ஊழியத்தை துவங்கபோகிறோம்.


இந்த ஊழியம் சிறப்பாக நடக்கவும், தொடர்ந்து தடையின்றி இந்தியா முழுவதும் வளரவும். இதன் தேவைகள் சந்திக்கப்படவும், சிறுவர்கள் மத்தியில் இதன் மூலமாய் பெரிய எழுப்புதல் உண்டாகவும், தேவ பக்தியுள்ள தலைமுறை உருவாகி தேசத்தின் பிரச்சனைகள் தீரவும் தொடர்ந்து ஜெபியுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.





கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Thursday, June 2, 2011

நடத்திக் காட்டுவோம்.




அன்பான எனதருமை உடன் விசுவாசிகளே, கடந்த 30  ம் தேதி ஜெபியுங்கள் என்ற தலைப்பில், இந்த இணையதள ஊழியம் வாயிலாக, சிறுவர் ஊழியம் துவங்க இருப்பதாக தெரிவித்து உங்கள் ஜெபங்களையும் ஆலோசனைகளையும் கேட்டிருந்தேன். இந்த ஊழியத்தை துவங்க முடியுமா? இதை
தொடர்ந்து நடத்த வாய்ப்பு கிடைக்குமா? என்னால் இது சாத்தியம்தானா?  இவையெல்லாம்  எப்படி நடக்கும் என்று பல கேள்விகள் என்னுள் நேற்றுவரை இருந்தது. நேற்று நான் இந்த ஊழியத்தில் பயன்படுத்த போகிற சகோதரர்களை அழைத்து பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்தேன் அப்போதுகூட மனதளவில் நான் பயந்துக் கொண்டுதானிருந்தேன்.

சகோதரர்கள் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். அவர்களுக்கு பயிற்சி கொடுத்துவிட்டு, வீட்டிற்கு வந்து ஒரு ஜெபக் கூட்டத்திற்கு ஆயத்தமானேன், அதற்காக பிரசங்கம் செய்ய திருவசனங்களை படித்துக் கொண்டிருந்தேன். அப்போது  லூக்கா1:37  ல் உள்ள வசனம் என் குழப்பத்திற்கு மிக தெளிவான பதிலை தந்தது. அந்த வசனம், கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்பதே. மரியாள், தான் கற்பவதியாகப் போகிற செய்தியை கேட்டு, இது எப்படியாகும் என்று கேட்டபோது தேவதூதன் சொன்ன பதில்தான் இது.


அன்பானவர்களே எவ்வளவு பெரிய உண்மை, நம்மால் உண்மையில் இந்த உலகில் ஒன்றையும் செய்ய முடியாது, ஆனால் நம்மைக் கொண்டு இவ்வுலகில் எல்லாவற்றையும் நடத்திக் காட்டுகிற கிறிஸ்து நம்மோடிருக்கிறார், அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். என் குழப்பம் தீர்ந்தது இதோ நான் ஆயத்தமாகிவிட்டேன். வரும் சனிக்கிழமை வாணியம்பாடியில் உள்ள கருணை இல்லத்தில் நமது  ஊழியத்தின் சார்பாக
சிறுவர் கொண்டாட்டம் என்ற சிறுவர்களுக்கான ஆவிக்குரிய
நிகழ்ச்சியை துவங்க
போகிறோம். உங்கள் வாழ்விலேயும் சந்தேகத்தோடு இருக்காதீர் காரணம் நம்மை நடத்துபவர் எல்லாவற்றையும் நம்மைக் கொண்டு  நடத்திக் காட்டுவார். தொடர்ந்து விசுவாச பயணத்தில் துணிவோடு நடப்போம். ஜெபித்து ஆலோசனைகளால் இந்த ஊழியத்தை தாங்குங்கள்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, June 1, 2011

கண்ணீரை துடைக்கும் இயேசு

ஏசாயா.25 :6 -9 


உயிர்த்த கிறிஸ்துவின்  நாமத்தில் ஸ்தோத்திரங்கள். அன்பானவர்களே, அழாதவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை. மனிதன் பிறக்கும்போதும் அழுகிறான், வாழும்போதும் அழுகிறான், இறக்கும்போதும் அழுகிறான். தான் நினைத்த காரியம் நடக்காத பொது, நோய் வறுமை, கடன், இவையெல்லாம் நம்மை அழ வைக்கிறது.

ஆனால் இந்த புதிய நாளில் இயேசு ஆண்டவர் நம்முடைய கண்ணீரைத் துடைத்து, நமக்கு புது வாழ்வு அருளுவார். ஆபிரகாமின் முதல் மனைவி சாராள் குழந்தை இல்லாதவளாய் இருந்தபோது, வேலைக்காரி ஆகாரை பிள்ளை பெற்றுத் தரும்படி ஆபிரகாமுக்கு கொடுத்தாள். பின்பு சாராள் கர்பவதியானதும், ஆகாரை விரட்டியடித்தாள். அப்போது அவள் மன வேதனையோடு வனாந்திரத்தில் வரும்போது, பிள்ளை தாகத்தால் மடிந்துக் கொண்டிருந்த நிலையில் கடவுளை நோக்கி அபயமிட்டாள்.

கடவுள் அவள் கண்ணீரைக் கண்டு அவள் மகனை காப்பாற்றினார். ஆகார்  கடவுளை,  என் கண்ணீரை கண்ட கடவுள் என்று சாட்சியிட்டாள்.

சங்.116 :8  ல் என் கண்ணை கண்ணீருக்கு விலக்கி காத்தார் என்று சங்கீத காரன் சாட்சியிடுகிறார்.

யோபு.16 :20  ல் நம்முடைய நண்பர்கள், நம்மை பரியாசம் பண்ணுகிறபோது கடவுள் அந்த கண்ணீரை துடைத்தார்.

எசேக்கியா அரசன் உண்மையும், உத்தமுமானவர், அவருக்கு நோய் ஏற்பட்ட பொது, மரணம் சம்பவிக்கும் என்று ஏசாயா கூறுகிறார். எசேக்கியா ராஜா அழுதார், இறைவனை நோக்கி கூப்பிட்டார், இறைவன் அந்த கண்ணீரை துடைத்தார், 15  ஆண்டுகள் ஜீவனை கூட்டி கொடுத்தார்.


பிரியமானவர்களே, இவைகள் நமக்கு சாட்சிகள், இயேசு ஆண்டவர் நமது கண்ணீர் துடைக்கவே அவர் கண்ணீர் வடித்தார், இரத்த வேர்வை சிந்தினார், மரணத்தை ஏற்றுக் கொண்டார். நமக்காக அவர் உயிர் கொடுத்து ஆசீர்வாதம் தந்தார். நமது துக்கத்தை சமாதானமாக மாற்றுவார், எனவே கலங்காதே திகையாதே, கர்த்தர் உன் கண்ணீரைத் துடைப்பார். உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்.


கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews