WORD OF GOD

WORD OF GOD

Friday, August 12, 2011

வெறுப்போரும், அழிக்க நினைப்போரும், ஆயிரம் பேர் இருக்கலாம்

அன்பான உடன் விசுவாசிகளுக்கு இனிய ஸ்தோத்திரங்கள். பொதுவாக நம் குடும்பங்களில் கடைசியாக பிறக்கிற குழந்தைகள் மீது பெற்றோர்களுக்கு பாசம் அதிகம். அந்த குழந்தையை கடைக்குட்டி என்று செல்லமாக அழைப்பார்கள் அக்குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது இயல்பான ஒரு விஷயம்.

வேதாகமத்தில், யாக்கோபுக்கு அவன் பிள்ளைகளில் யோசேப்பின் மீது அதிக பாசம் அத்ற்கான காரணம் ஆதியாகமம் 37ம் அதிகாரம் 3 வது வசனம் கூறுகிறது. யோசேப்பு யாக்கோபின் முதிர் வயதிலே பிறந்தவன். எனவே யாக்கோபு யோசேப்பின் மீது அதிக பாசம் கொண்டிருந்தான். அது அவனுடைய‌ மூத்த சகோதரர்களுக்கு பெரிய எரிச்சலை உண்டாக்கியது.

அதுமட்டுமல்லாமல் யோசேப்பை, அவனுடைய சகோதரரெல்லாம் பணிவதாக கனவு கண்டு, அதை தன் சகோதரர்களிடத்திலேயே கூறினான். இது அவர்களை மூர்க்கமடைய வைத்த‌து. அவனை கொலை செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு மூர்க்கமானார்கள். சின்ன பையன் தங்களை விட உயர்வான் என்று சொன்னால் யாரால்தான் ஏற்றுக் கொள்ளமுடிகிறது?

காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிற தன் சகோதரர்களை காண தந்தையின் கட்டளைப்படி புறப்பட்டு போனான் யோசேப்பு ஆனால் அவன் சகோதரர்களோ, அவனை அடித்து உதைத்து பாழுங்கிணற்றில் தள்ளி, கடைசியில் அரேபிய வியாபாரிகளுக்கு விற்றார்கள், அவர்களோ அவனை எகிப்தில் உள்ள அரண்மனை ஊழியனான போத்திபாரின் வீட்டில் விற்றனர்.

ஆனால் அங்கே தான் அவன் வாழ்வில் அனேக மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தது. அவன் எஜமான், வேலைக்காரனாகவும், வீட்டு விசாரிப்புக்காரனாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக தன் சொத்துக்கள் அனைத்தையும் பராமரிக்கும் தகுதியையும் அவனுக்கு கொடுத்தான்,

அவன் சொந்த சகோதரர்கள் இவனை அழிக்க பார்த்தார்கள், ஆனால் யாரோ ஒருவன் அவனை தன் வீட்டின் அதிபதியாக வைக்கிறான். எப்படி இந்த மாற்றம். வேதாகமம் சொல்லுகிற காரணம், அவனோடு கர்த்தர் இருந்தார். ஆதியாகமம்.39:3.

அன்பானவர்களே, நம்மை வெறுப்போரும், அழிக்க நினைப்போரும், ஆயிரம் பேர் இருக்கலாம்,ஒரே ஒருவர் நம்மோடிருக்கிறார். அவர்தான் வெற்றியருளும் ராஜா.  யூத ராஜசிங்கம், நாம் வாழ தன்னுயிரை கொடுத்தவர். ஆண்டவராகிய கிறிஸ்து. ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

 

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews