WORD OF GOD

WORD OF GOD

Monday, July 11, 2011

யாரும் எதுவும் நம்மை வெல்ல முடியது.

ஞாயிற்று கிழமைக்கான திருவசனங்கள்.

யாத்திராகமம்.19:2-6

ரோமர்.5:6-11

மத்தேயு.9:35-10:7

பிரசங்க வாக்கியம். யாத்திராகமம்.19:2-6


அன்பான உடன் விசுவாசிகளே, கடவுள் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். அவர் என்ன சொல்லுகிறாரோ அது நடக்கும். இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த போது அவர்கள் மீது இரக்கப்படவோ அவர்களை காப்பாற்றவோ ஆளே இல்லாமல் நாதியற்று வாடினர். கடவுள் மட்டுமே அவர்கள் கூக்குரலை கேட்டார் அவர்களை விடுதலையாக்க சித்தம் கொண்டார். அந்த பெரிய பொறுப்பை மோசேவிடம் கடவுள் கொடுத்தார். மோசேவோ அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. யாத்திராகமம் 3:12 ல் அதை காணலாம் அனால் கடவுளோ அவரை விடவில்லை.

எந்த மலையிலிருந்து உன்னை அழைக்கிறேனோ அதே மலைக்கு நீ திரும்ப இஸ்ரவேல் ஜனத்தோடு வந்து எனக்கு ஆராதனை செய்வாய் என வாக்குறுதி கொடுத்தார். கடவுள் சொன்ன அந்த வாக்குறுதி நிறைவேறின பகுதிதான் இந்த தியான பகுதி. மோசே இஸ்ரவேல் ஜனத்தோடு சினாய் மலைக்கு எதிரில் இஸ்ரவேல் மக்களோடு வந்து சேர்ந்தார்.

உடனே கடவுள் மோசேவை மலை மீது அழைக்கிறார். மோசே ஓடுகிறார். அங்கே கடவுள் இஸ்ரவேல் ஜனத்திற்கு ஒரு பெரிய இன்ப அதிர்ச்சியை தருகிறார். அது யாதெனில் நீங்கள் தொடர்ந்து என் வார்த்தைகளை கைக்கொண்டு வாழ்ந்தால், நீங்கள் என் சொந்த சம்பத்தாய் இருப்பீர்கள் என்கிறார். பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது.  எல்லாம் தனக்கு சொந்தமாக கொண்டுள்ள கடவுள் இந்த ஜனத்தை விசேஷமாக தன் சொந்த சொத்தாக தெரிந்துக் கொள்ளுகிறேன் என்று கூறுகிறார்.

சொந்த சொத்தாக இருந்தால் என்ன பயன்? நம் சொந்த சொத்தை யாராவது  தொட முடியுமா? அதை கண்ணும் கருத்துமாக பாதுகாத்துக் கொள்வோம். அதே போலதான் அவர்கள் கடவுளின் சொந்த சொத்தானால் கடவுள் அவர்களை ஒருவனும் தொட முடியாதபடி, தன் சொந்த பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாக காத்துக் கொள்வார். அதற்காக அவர்கள் செய்ய வேண்டியது, அவருடைய வார்த்தையை தொடர்ந்து கை கொள்ள வேண்டும்.

அப்படியானால் நமக்கும் கடவுளுக்கும் என்ன உறவு?   இஸ்ரவேலர் அவருடைய சொந்த சம்பத்தானால்? நாம் இயேசு ஆண்டவரால் இரட்ச்சிப்பை பெற்று புதிய இஸ்ரவேலர்களாய் வாழ்பவர்களல்லவா? நமக்கும் அவருக்கும் என்ன உறவு? அதைதான் ரோமர் 5 ல் 6 முதல் உள்ள வசனங்களில் வாசிக்கிறோம். நாம் அவர் ரத்தத்தால் ரட்சிப்பை பெற்றதால், அவர் ரத்த உறவுகளாய் மாறுகிறோம், அதைதான் திருவிருந்தில் பங்கு பெறும்போதெல்லாம் உணருகிறோம், அவருடைய ரத்தத்தில், சரீரத்தில் பங்கு பெற்று நாமும் அவரது சரீரத்தையும், ரத்தத்தையும் நம் சரீரத்தில் தரித்து, அவருடைய ரத்த உறவுகளாய் வாழ்ந்து வருகிறோம்.

அப்படியானால் நம்மை யார் ஜெயிக்க முடியும்? ஒருவனும் ஜெயிக்க முடியாது. காரணம் இயேசுவை ஒருவனும் இவ்வுலகில் ஜெயித்ததில்லையே அவரது ரத்தம்தானே நம் சரீரத்தில் ஓடுகிறது. அப்படியானால் நம்மையும் ஒருவனும் வெல்ல முடியாது. ஆனால் இந்த வாழ்வின் உத்தரவாதம் அவருடைய வார்த்தைகளை கை கொள்ளுகிறவர்களுக்கு மாத்திரமே சாத்தியம்.


எனவே நம் வாழ்வில் இந்த மேன்மையை அனுபவிக்க அவர் வார்த்தையை கை கொள்ள வேண்டும். அவர் வார்த்தையை படிப்பதில், ஆலயத்திற்கு போய் அவருடைய வார்த்தையை கேட்பதில், உற்சாகம் உள்ளவர்களாய் இருத்தல்தானே கிறிஸ்தவ வாழ்க்கை, அது மட்டும் போதாது படித்த கர்த்தருடைய வார்த்தையை, கேட்ட கர்த்தருடைய வார்த்தையை கடைபிடிக்க வேண்டும், அப்படி செய்தால் நாம் அவரது ரத்த உறவுகளாய் நீடிப்போம், தகப்பன் வார்த்தைக்கு கீழ்படிந்து நடப்பவந்தானே உண்மையான பிள்ளை இல்லையேல் தகப்பனே நீயெல்லாம் ஒரு பிள்ளையா? என்று கேட்பாரே.

நாமும் கர்த்தரின் வார்த்தையை கைக்கொண்டு அவருடைய பிள்ளைகளாய் வாழ்ந்து இவ்வுலகில் வெல்லமுடியா வெற்றி வாழ்வு வாழ கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews