WORD OF GOD

WORD OF GOD

Friday, July 15, 2011

இறைவன் நமக்கு காவலிருப்பார்

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். நாட்டில் நடக்கிற தீவிரவாத சூழ்நிலைகளை கண்டால் மனம் மிகவும் வேதனையாகிறது. மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடித்து 100க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் மக்கள் நடமாடும் இடத்தில் குண்டு வைத்துள்ளனர்.

கொள்கைகள் மனிதனுக்கு அவசியமானவைகள், ஆனால் ஓர் உயிரை கொல்வது கொள்கையாகுமா? இந்த போக்கு எதிர்காலத்தை அச்சத்துக்குள்ளாக்குகிறது. மனிதன் நடக்கிற பாதையெல்லாம் ஆபத்து நிறைந்ததாக மாறி வருகிறது. யார் மீதோ இருக்கிற கோபத்தை அப்பாவி மக்கள் மீது காட்டும் கோழைத்தன தீவிரவாதம் மிகவும் பயங்கரமானது.
பாதுகாக்க வேண்டியவர்களோ மெத்தனமாக செயல்பட்டு, நம் வாழ்வை மேலும் கேள்வி குறியாக்குகின்றனர்.

தாவீதின் வாழ்க்கை கிட்ட‌த்தட்ட‌ இதே திகிலோடுதான் இருந்த‌து. கோலியாத்தை கொன்ற‌ பிற‌கு, அவ‌ன் மிது பொறாமை ப‌ட்டு, தாவீதை கொலை செய்ய சவுல் க‌ட்ட‌ளை பிற‌ப்பித்தான். கோலியாத்தின் ப‌டை ஒருபுற‌ம் அவ‌னை தேடி வ‌ருகிற‌து. இப்ப‌டி த‌வீதின் வாழ்வு ம‌ர‌ண‌த்தின் ந‌டுவில் ஊச‌லாடிய‌து.

ஆனால் தாவீதின் தைரிய‌ம் மிக‌வும் ஆச்ச‌ரிய‌மான‌து, ச‌ங்கீத‌ம்.23:4 ல் நான் ம‌ர‌ண‌ இருளின் ப‌ள்ள‌த்தாக்கிலே ந‌ட‌ந்தாலும் பொல்லாப்புக்கு ப‌ய‌ப்ப‌டேன். என்று தில்லாக‌ கூறுகிறார். எப்ப‌டி இவ்வ‌ள‌வு தைரிய‌ம் அவ‌ரே சொல்லுகிறார், தேவ‌ரீர் என்னோடு கூட‌ இருக்கிறீர் உம‌து கோலும் உம‌து த‌டியும் என்னை தேற்றும் என்ப‌தே.

ஆம் அன்பான‌வ‌ர்க‌ளே ந‌ம்மை சுற்றி ந‌ம் தேவ‌ன் ந‌ம‌க்கு காவ‌லிருக்கிறார். ந‌ம்மை எல்லா தீங்குக்கும் வில‌க்கி காப்பார். கிறிஸ்துவில் ஜீவ‌னை த‌ந்து ந‌ம்மை காத்த‌வ‌ர், இப்போது தூயாவியான‌வ‌ராய் ந‌ம்மோடு வாழ்வெல்லாம் ப‌ய‌ணிப்ப‌வ‌ர் ந‌ம்மை வேட‌ன் க‌ண்ணியினின்றும், பாழாக்கும் கொள்ளை நோயினின்றும் காத்து ந‌ட‌த்துவார்.

அதே வேளையில் உயிரிழந்த‌வ‌ர்க‌ளுக்காக‌, அவ‌ர்க‌ள் குடும்ப‌ம் அச்ச‌த்திலிருந்து மீண்டுவ‌ர‌, காய‌ங்க‌ளால் அவ‌தியுறுவோர் விரைவில் குண‌ம் பெற‌ ந‌ம் ஆண்ட‌வ‌ரை ஒரு நிமிட‌மாவ‌து வேண்டுத‌ல் செய்வோம். தொட‌ர்ந்து இதுபோன்ற‌ கோழைத்த‌ன‌ தாக்குத‌ல்க‌ள் தொட‌ராம‌ல் இருக்க‌வும் வேண்டுத‌ல் செய்வோம்

நாமும் ந‌ம் நாடும் ச‌மாதான‌மாய் இருக்க‌ முழ‌ங்காலில் நிற்போம். ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
 

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews