அன்புள்ள சகோதரர்களே காலை வணக்கங்கள் ஏசாயா.43 :5 ன் வழியாக கடவுள் கூறுகிறார் பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்.
ஒவ்வொரு காலையை துவங்குவதும் பெரிய சவாலாக உள்ளது காரணம், போட்டி பொறாமை நிறைந்த உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நம்மை நிலை நிறுத்திக்கொள்ள தினந்தோறும் போராட வேண்டியுள்ளது, உதவி செய்யவோ துக்கிவிடவோ ஆள் இல்லாமல் தவிக்கிறோம், உண்மையான அன்புள்ள நண்பர்களை அடையாளம் காண முடியாமல் தவிக்கிறோம்.
எந்த நாள் எந்த ரூபத்தில் ஆபத்து வரும் என்று தெரியாமல் தவித்து வருகிறோம். நன்மைகளையும் நல்லவர்களையும் தேடி தேடி அலுத்து போன வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம்.
ஆனால் இந்த காலை வேளையில் கடவுள் நம்மோடு பேசுகிற வார்த்தை நான் உன்னோடு இருக்கிறேன், பயப்படாதே என்பதே. இந்த முழு உலகையும் படைத்த நம் கடவுள் இன்று நமக்கு துணையாக இருக்கிறார். பயப்படாதே என்று தைரியமுட்டுகிறார்.
இந்த நாளில் நம்முடைய அத்துணை நிகழ்வுகளிலும் அவர் நம்மோடு இருந்து நம்மை பாதுகாக்க போகிறார். அந்த முழு நிறைவோடு இந்த நாளை நாம் துவங்க கடவுள் நம்மை ஆசிர்வதிப்பாராக ஆமென்.
WORD OF GOD
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
அன்பானவர்களே ஞாயிற்று கிழமைக்கான பிரசங்க வாக்கியத்தை நாம் முன்னதாகவே தியானிப்போம் . திரு வசனங்கள்: சங்கீதம்.112 ...
-
வேத வினா விடை போட்டி இம்முறை வேத விடுகதை போட்டியாக வருகிறது. இந்த முறை வேதவினா போட்டியை வேத விடுகதை முறையில் நமக்கு தொகுத்துக் கொடுத்தவர் எ...
உங்கள் இதயம் தொட்டவை
-
அன்பான உடன் விசுவாசிகளே, ஒரு முன்மாதிரியான போதகர் எப்படி இருக்க வேண்டும் என வேதாகமம் என்ன சொல்லுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இது திருச...
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
Text: மத்தேயு. 4:15 இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது.....
No comments:
Post a Comment