WORD OF GOD

WORD OF GOD

Wednesday, April 13, 2011

காலை மன்னா

தியான பகுதி மாற்கு.15 :42 -46 

பலவீனன் பெலவான் ஆகிறான்.


சிலுவையின் நாயகனாகிய பாடுகளின் தாசனாகிய, இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம். அன்பான கடவுளுடைய பிள்ளைகளே இந்த தவக் காலங்களில், சிலுவை பாதையில் நாம் யார் என்பதனை தியானித்து வருகிறோம். இங்கே அரிமத்தியா யோசேப்பு என்பவன் மிகச்சிறந்த சீடராக சிலுவை பாதையில் இருந்தார்.

அரிமத்தியா யோசேப்பு:

இவர் யூத சனேகரீம் சேர்ந்தவர், செல்வம் மிக்கவரும்,  மதிக்கப்பட்டவரும் ஆவார்.

* மாற்கு.15 :42 -46  ல் கடவுள் ராஜ்ஜியம் வர காத்திருந்தவர் என்று காண்கிறோம்.

* மத்தேயு.27 :57 -60  இவன் ஐசுவரியவான்.

* லூக்கா.23 :50 -53  உத்தமன், நீதிமான், மற்றவர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும், சம்மதியாதவன். கடவுளின் ராஜ்ஜியம் வரக் காத்திருந்தவன்.

* யோவான்.19 :38 -42  இயேசுவின் சீடர், யூதர்களுக்கு பயந்திருந்தவர். அந்தரங்க சீடன்.

தைரியம் நிறைந்தவர்:

சிலுவையில் இயேசு தொங்கிக்கொண்டிருக்கிறார், சீடர்கள் அவரது உடலை கேட்க வரவில்லை, இவர் பயந்தார் ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, பிலாத்துவிடம் போய் கேட்டார். இன்று அனாதையாய் இருக்கும் ஒருவருக்கான உரிமைகள் கிடைக்க நாம் மேலிடத்தில் பரிந்து பேச முயல்வோமா? நமக்கு அந்த தைரியம் உண்டா?

மனிதநேயம் உடையவர்:

இவர்  ஒரு நல்லவர் என லூக்கா குறிப்பிடுகிறார். மனித தன்மையற்று நீதிமானாகிய இயேசுவை சிலுவையில் அறைந்த யூதர்களில் இவர் ஒரு சிறந்த மனிதன். மனிதனை மனிதனாக பார்க்கவேண்டும்.

தியாகம்:

இயேசுவுக்காய் தன சொந்த கல்லறையை தந்தார். ஏசாயா.53:9 ல் ஒரு செல்வந்தனின் கல்லறையில் அடக்கம் பண்ணப்படுவார் என்பது நிறைவேறியது, இன்று நாம் தியாக மனப்பான்மையாக வாழ்கிறோமா?

இயேசுவின் பகிரங்க சீடன்:

மத்தேயு, யோவான், இவரை இயேசுவின் சீடன் என்று கூறுகிறார்கள். யூதாஸ் மரித்துவிட்டார், மற்றவர்களோ ஓடிப்போய்விட்டார்கள். ஆனால் இவரோ தன்னை சரியான நேரத்தில் சீடன் என்பதனை வெளிப்படுத்துகின்றார்.

இன்று நாம் எப்படி? பெயரளவில் கிறிஸ்தவர்களாக வாழ்கிறோமா? உண்மையான பகிரங்க சீடர்களா? பலவான்களை வெட்கப்படுத்த பலவீனர்களை தெரிந்தெடுத்தார். 1.கொரிந்தியர்:1;27 .ரோமர்.5:6, ரோமர்.8:13, ரோமர்.8:24 ஆகிய வசனங்கள், பலவீனர்களை இயேசு எப்படி பெலவானாக்குகிறார் என்பதை காட்டுகின்றன.

இன்று திருச்சபை யாரோடு நிற்கிறது? எந்த கூட்டணியில் உள்ளது? பதவி பலம், செல்வம், போன்றவற்றால் கைவிடப்பட்டவர்களோடா? கைவிட்டவர்களோடா? அரிமத்தியா யோசேப்பின் திணிச்சல் நமக்கு உண்டா? கடவுள்தாமே நம்மை பெலப்படுத்துவாராக ஆமென்.


கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews