WORD OF GOD

WORD OF GOD

Tuesday, April 26, 2011

இரட்சிப்பின் சரித்திரம்

அன்பான இணையதள நண்பர்களே ஸ்தோத்திரங்கள். இன்று JESUS SAVES ஊழிய நண்பர்கள் கர்த்தர் உயிர்த்தெழுந்த பண்டிகையின் வாழ்த்துக்களை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளுகிறார்கள். கடந்த ஞாயிற்று கிழமை அன்றே பதிவிட வேண்டியது ஆனால் என்னால் பதிவிட இயலவில்லை. இன்று இதை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்.

JESUS SAVES


அகிலத்தையும் அழகாய், தன் சாயலில் மனிதனையும் உருவாக்கி

ஆண்டு அனுபவி என்றார் பாரினை படைத்தவர்

இறைவனின் ஆணையை பாவ இச்சையால் மீறி பிசாசின்  வலையில் வீழ்ந்தான்

ஈனத்தன பாவம் செய்து பாரே பாவக்கடலில் உழன்றது

உள்ளத்தினாலும் உணர்வினாலும் கற்பனைகளின் கண்ணியத்தையே மாற்றினான்

ஊரே அல்ல, இந்த உலகே வீழ்ந்தது கொடிய  பாவத்தீயில்

எல்லாம் திறம்பட, சிறப்பு படைத்த பரமன் கண்ணுற்று கண்ணீர் சிந்தினார்.

ஏற்றமிகு வாழ்வை மானுடம் பெற்றிட தீட்டினார் திட்டம் திரியேக தேவன்

அய்யனே பிறந்தார் இத்தாரணியில், எல்லாம் இழந்து ஏழை மனுவாய்

ஒப்பில்லா இறைமகன் நம் பாவம் சுமந்து கோர சிலுவையில் மரணத்தை ஜெயித்தார்.



ஓங்கியது விண்ணவரின் மகிமை - வீழ்ந்தது சதிகார சாத்தானின் பெருமை.

ஒளஷதமான மீட்பை தந்தார் ஆதியில் வீழ்ந்த மானிடத்தை மீட்டார்.

பாவத்தை வெறுப்போம்: பரமனின் சிலுவை தியாகத்தை நினைப்போம்.

நானே உன் தேவன், தாய் தந்தை கணம், ஒய்வு நாள் பரிசுத்தம் உனக்கு
வேண்டும்



களவு, பொய், துன்மார்க்கம் கர்த்தர் வெறுப்பது:

காணும் அயலானில் அன்பு செய்: ஒன்றையும் இச்சியாதே-நீ நன்றாய்

களிப்புடன் வாழ கற்பனைகளை கைக்கொள்.

விசுவாசி இரட்சிக்கப்படுவாய்: உன்பாவத்தை அறிக்கையிடு மன்னிப்பு பெறுவாய்:

பரலோகில் பரனுடன்  பரிசுத்த வாழ்வு வாழ ஆயத்தமா?

மரணத்தையும் பிசாசையும் வென்று மீட்பை தந்திட அழைக்கிறார் நண்பனே

எழுந்து பிரகாசி, உன் ஒளி வந்தது, இரட்சிப்பை பெற்றாய் இலவசமாய் கூறு.

அனைவரும் இரட்சிப்படைவதே அவரின் சித்தம்.

உயிர்த்தெழுந்த நாதர் இயேசு இரட்சகரின் உன்னத நாமத்தில் வாழ்த்துக்கள்

கிறிஸ்துவின் நற்செய்திப் பணியில்...
பரிசுத்த மாற்கு லுத்தரன் திருச்சபையின்
இயேசு இரட்சிக்கிறார் ஊழியங்கள்
விண்ணமங்கலம்.
ஆம்பூர்.
வேலூர் மாவட்டம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews