WORD OF GOD

WORD OF GOD

Saturday, April 30, 2011

பொறுத்திருப்போம் தோழி

அன்புள்ள தோழி,


பொறுத்தார் "பூமிஆள்வார்"  என்று சொல்லுவார்கள், பொறுமைக்கு  இலக்கணமாக  பெண்களை சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் அனேக வேளைகளில் நமது பொறுமைகள் கரைந்துப்போய் விடுகின்றன - என்பதே உண்மை.

"தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கேட்டு போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்". (யோவான்.3 :16 ) என்ற வேத வாக்கின் படி பாவ மனுக்குலத்தை மீட்கும் பிதாவின் ஒப்பற்ற திட்டத்தின்படி ஆண்டவராகிய இயேசு உலகிற்கு வந்தபோது, அதற்கான ஒரு பாத்திரமாய் மரியாள் தெரிந்தெடுக்கபட்டிருந்தாள்.

அந்த காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, ஒரு கன்னிப் பெண்ணானவள் கர்ப்பம் தரிப்பது என்பது, சமூகத்தின் பார்வையில் இலேசான காரியம் அல்ல.

ஆனால் மரியாள் கடவுளின் திட்டத்திற்கு முழுமையாய் தன்னை அர்ப்பணிக்கின்றாள். வாக்குத்தத்தங்கள் நிறைவேரும்படியாய்
முழுமையாய் பொறுமையாய் காத்திருக்கின்றாள் .

தோழி, "பொறுமையாய் செய்யும் காரியம் சிதறாது" என்பார்கள். மரியாளின் பண்பட்ட வளர்ப்பில் பொறுமையாய் வளர்ந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.... ஏற்ற காலம் வரும் வரை அதாவது தனது முப்பதாவது வயது வரை காத்திருந்து பொறுமையாய் தன ஊழியத்தை ஆரம்பித்தார். ஊழியத்தின் விளைவாக இரட்சிப்பின் திட்டத்தின் நிறைவாக அவர் சிலுவையில் அறியப்பட வேண்டியது வந்தபோதும், பொறுமையாய், முழுமையாய் தன்னை அற்பணிக்கின்றார். அனைத்து அவமானங்களையும், வேதனைகளையும் பொறுமையுடன் சகித்து தீர்த்தார்.


அன்பு தோழி நாம் அனைவரும், அவருடைய பிள்ளைகளாய் அழைப்பு   பெற்றவர்கள்

வாழ்வின் எந்நிலையிலும் அவருடைய பொறுமைகளை தரித்துக்கொள்வோம், நம்முடைய பொறுமையும், சகிப்புத்தன்மையும் மற்றவர்கள் முன்பாக ஆண்டவர் நம்மீது வைத்த அன்பினை, இரக்கத்தை சுட்டிக்காட்டக்கூடியதாக அமைந்திருப்பதாக.

பாடுகளின் காலத்தை  பரிசுத்தமாய் ஆசரித்த நாம், உயிர்த்தெழுந்த உன்னதரை முழுமையாக சார்ந்திருப்போம். உபத்திரவமோ, வறுமையோ, துன்பமோ - எதுவாயினும் பொறுமையாய் அவரிலே கொடிகளாய் நிலைத்திருப்போம். ஆண்டவர் தாமே நம்மையும் தம்முடைய கிருபைகளாலும், இரக்கங்களாலும் நிறைத்து, முழுமையாய் நம்மை தமது பரிசுத்த ஆவியினால் பலப்படுத்தி காப்பாராக ஆமென்.

அன்பு வணக்கங்களுடன்,
திருமதி.உஷா ராஜ்குமார்.MA .BTh .
ஆம்பூர்.
 
கருத்துரையிடாமல் செல்லலாமா தோழியரே........

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews