WORD OF GOD

WORD OF GOD

Friday, April 15, 2011

ஆயத்தமா?

அன்பான உடன் விசுவாசிகளே, உங்கள் யாவருக்கும் ஸ்தோத்திரங்கள். இன்றைய காலை மன்னாவில் தியானிக்க எடுத்துக் கொண்ட வசனம், லூக்கா.14 :27 .

தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னை பின்பற்றுகிறவர்களை பார்த்து சொன்ன கட்டளை தான் இந்த வசனம். அவரை பின்பற்றுகிறவர்கள், தங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரை பின்பற்ற வேண்டும் என்று கட்டளையாகவே கூறுகிறார், சிலுவையை சுமக்க மனமில்லாதவன் எனக்கு சீடனாயிருக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறுகிறார்.



நம் ஒவ்வொருவருக்கும் இயேசுவின் சீடர்களாய் வாழ வேண்டும் என்பதுதான் விருப்பம், அவருடைய சீடர்களாக நாம் இருக்க வேண்டும் என்றால் அவர் கொடுக்கிற கட்டளை சிலுவை சுமக்க வேண்டும். முதலாவது சிலுவை என்றால் என்ன என்று நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

பலர் தாங்கள் சந்திக்கிற பாடுகளை சிலுவை என்று சொல்லுகின்றனர், அதாவது, கடன் பிரச்சனை, வியாதிகள், வேலையின்மை, தடைகள், போன்ற நம்முடைய அன்றாட வாழ்வில் சந்திக்கிற போராட்டங்களை சிலுவை என்கின்றனர். ஆனால் ஆண்டவர் தெளிவாக கூறியுள்ளார் இந்த உலகில் உங்களுக்கு உபத்திரவங்கள் உண்டு என்று. இவையெல்லாம் நம் உபத்திரவங்களே தவிர சிலுவை அல்ல.

சிலுவையின் மெய்யான அர்த்தத்தை புரிந்துக் கொள்ள, இயேசு ஏன் சிலுவை சுமந்தார் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.


ஏன் இயேசுகிறிஸ்து சிலுவை சுமந்தார்? தனக்காகவா? இல்லை இவ்வுலகில் வாழ்ந்த மற்ற மனிதர்கள் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக. அவர்கள் இரட்சிப்படைய வேண்டும் என்பதற்காக. அப்படியானால் சிலுவையின் மெய்யான அர்த்தம் என்ன?

பிறருக்காக சுமப்பது. நம் வாழ்வில் நம் சக மனிதனுக்காக, அவர்கள் நன்மைக்காக, அவர்கள் வாழ்வுக்காக நாம் துன்பங்களை அனுபவிக்க ஆயத்தமாயிருப்பதுதான் சிலுவை சுமக்கிற வாழ்க்கை. இன்று துன்பத்தோடிருக்கிற கடவுளுடைய ஊழியனை தாங்குவதைக்கூட உபத்திரவமாக நினைக்கிற நிலைக்கு நம் வாழ்வு சுயநலம் மிகுந்துள்ளது.

அப்படியானால் நமக்காக கிறிஸ்து சிலுவை சுமந்ததை பெருமையாக சொல்ல நமக்கு இடம் இல்லை. நாம் மற்றவர்களை தாங்க ஆயத்தமாக இல்லை என்றால் நம்மை தாங்க அவர் ஆயத்தமாக இல்லை எனவேதான் அப்படிப்பட்டவன் எனக்கு சீடனாயிருக்க முடியாது என்று மிக தெளிவாக இயேசுகிறிஸ்து கூறுகிறார்.


சிந்தித்து பார்ப்போம், அடுத்தவர் வாழ்வில் நம் பங்கு என்ன? உண்மையாக கஷ்ட்டப்படுகிறவனுடைய வாழ்வில் நம் நிலை என்ன? திறமைகள் இருந்தும் முன்னேற வசதியும் வாய்ப்புகளும் இன்றி தவிக்கிற ஒரு சகமனிதனுக்கு வாய்ப்பிருந்தும் உதவாமல் இருக்கிறோமா?

சகமனிதனை தாங்க மனமுண்டா? அதுதான் மெய்யான சிலுவை.
சுமக்க ஆயத்தமா? சிந்திப்போம். செயல்படுவோம்..


 
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

1 comment:

  1. very useful these messages. could you send me these updates pls.

    maradi@live.ca

    ReplyDelete

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews