WORD OF GOD

WORD OF GOD

Friday, February 4, 2011

அறிவோம் ஆரோக்கியம்

அன்பான உடன் விசுவாசிகளே இன்று முதல் இன்னொரு புதிய பக்கம் உங்களுக்காக துவங்குகிறது, இது நமது ஆரோக்யத்தை பற்றிய பக்கம். எனது நண்பரும் ஊழியருமான் சாந்தகுமார் (pharmacist) அவர்கள் நமக்காக இதை ஒவ்வொரு வாரமும் வழங்குகிறார். நாம் அன்றாடம் பயன்படுத்துகிற மருந்துகளை பற்றியும், அதன் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றியும் நமக்கு தெளிவாக விளக்க போகிறார் இனி அவரோடு பயணம் செய்வோம்.

பாரசிட்டமால் Paracetamol

 
Para என்பது கிரேக்க வார்த்தை. இது அனேக வியாதிகளுக்கு பயன்படுகிறது.

கிடக்கும் விதங்கள்:         சிரப் (syrub), ஊசி, மாத்திரைகள்.

பயன்: வலி நிவாரணி, காய்ச்சல் குறைக்க, மிதமான எரிச்சல்களை குறைக்க .

அளவு:

பெரியவர்கள்: 0.5 - 1g ,  4 - 6 மணி நேரங்களுக்கு. அதிக பட்சமாக ஒரு நாளைக்கு 4g                           வரை உட்கொள்ளலாம்.

சிறு குழந்தைகள்: 3 மாதங்கள் முதல் ஒரு வருடம் 60௦ - 120mg
                                  1 வருடம் முதல் 5 வருடங்கள்  120 - 250 mg
                                  6 வருடம் முதல் 12 வருடங்கள் 250 - 500 mg 
மூன்று  மாதங்களுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 10 mg

அதிகமாக உட்கொள்வதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்:

குமட்டல்
வாந்தி
ஒவ்வாமை
வயிற்றுப்புண்
கல்லீரல் பாதிப்பு.

===) காய்ச்சலை குறைக்க தசை வழியாக இம்மருந்து (150mg/1ml) ஆக 2ml செலுத்தப்படுகிறது.
===) காய்ச்சலுக்கு கிடக்கப் பெற்ற ஒரு வரப்பிரசாதமாக இம்மருந்து கருதப்படுகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் உலகளவில் இம்மருந்தையே பயன்படுத்துகின்றனர்.

சந்தைகளில் கிடைக்கும் பெயர்கள்:
குரோசின் (crocin )
கால்பால் (calpol )
மெட்டாசின் (metacin )
பாசிமால் (pacimal )   மற்றும் பல.

குறிப்பு :
                     இம்மருந்தை அதிகமாக, அடிக்கடி உட்கொள்ளும் பட்சத்தில் இம்மருந்தின் வீரியத்தன்மை அதாவது செயல்படும் தன்மை குறைந்து உட்கொள்ளும் அளவை அதிகரிக்க வேண்டிய சூழல் உண்டாகும். எனவே அதிகமான வலியோ, காய்ச்சலோ இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது.

பிரசவ காலத்தில் பெண்கள் இம்மருந்தை உட்கொண்டால் அவர்களையும் கருவில் உள்ள சிசுவையும் பாதிக்கும்.


உடனடி நிவாரணம் கிடைப்பதாலும், குறைந்த விலையில் கிடைப்பதாலும், இம்மருந்தை அடிக்கடி உட்கொள்ளும் பழக்கமும் ஏன் அதற்கு அடிமையாகிடும் நிலையம் கூட ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.

குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைப்பது நல்லது.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக் இருந்ததா கருத்துரை இடுங்கள்.

இப்படிக்கு உங்கள் சகோதரர்.
சாந்தகுமார் (pharmacist)

1 comment:

  1. Praise the lord .
    Bro. Santha kumar.Thanks for U R (Paracetamol ) Adult & Age wise Child dosage level and Notes , we are expecting more Medicine details .
    D.Mary Kethalin.

    ReplyDelete

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews