WORD OF GOD

WORD OF GOD

Saturday, February 26, 2011

காலை மன்னா

அன்பான என் சகோதர சகோதரிகளே, உங்கள் யாவருக்கும்   ஸ்தோத்திரங்கள். இன்றைய தியான வசனம். 1சாமுவேல்.1:1-2

1 எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சேரப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன்.

2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை

திருமணமான பிறகு, எல்லாரும் விரும்பி எதிர்பார்ப்பது ஒரு குழந்தையை, காரணம் குழந்தை என்பது பெற்றோர் என்ற சமூக உயர்வை தருகிறது, அதுமட்டுமல்ல, மணவாழ்வை அர்த்தமுள்ள வாழ்க்கையாக்குகிறது, எனவேதான் பிள்ளை செல்வம் என்று சொல்லுகிறோம், பிள்ளைகள்தான்  பெற்றோர்களின் முதல் செல்வமாக இருக்கிறார்கள்.

நமுடைய தியான பகுதியில் எல்க்கானா  என்கிற ஒரு மனிதன் இருக்கிறான் அவனுக்கு இத்ரண்டு மனைவிகள் இருக்கிறார்கள், ஒருவள் பெயர் அன்னாள், இன்னொருவள் பெயர் பெனின்னால், அன்னாளுக்கோ குழந்தை இல்லை, ஒவ்வொரு வருடமும் இவர்கள் சீலோவிலே கர்த்தருக்கு பலியிட வருவார்கள், அப்படி வரும்போதெல்லாம், எல்க்கானா  பெனின்னாளுக்கும் அவள்  பிள்ளைகளுக்கும் ஒரு பங்கும், அன்னாளுக்கு இரண்டு பங்கும் கொடுப்பார், இது பெனின்னாளுக்கு பொறாமை உண்டாக்கினது எனவே, அன்னாளின் பிள்ளை இல்லாத குறையை சுட்டிக்காட்டி கேவலமாக பேசினாள்.

இது அந்நாளுக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்தது. காரணம், பிள்ளைகள் என்பது கர்த்தரால் வரும் சுதந்திரம், அதாவது கடவுள் கொடுக்கிற ஆசீர்வாதம், பிள்ளைகளை கடவுளிடமிருந்து நாம் பெற்றுக் கொள்வதால்   தான் நாம் பெற்றோர்களாகிறோம்  .

எனவே கடவுளுடைய ஆசீர்வாதம் கிடைக்கவில்லையே என்கிற ஏக்கமும் ஆதங்கமும் அன்னாளிடம் மிக அதிகமாக இருந்தது. அதன் விளைவு தேவாலயம் போய் கதறி அழுது ஜெபித்தாள்.

நம்முடைய வாழ்விலும் கூட பல நேரங்களில் இறைவனின் முழுமையான
ஆசீர்வாதத்தை அனுபவிக்கமுடியாமல் இருக்கலாம் அதற்காக நாம் வருந்தலாம், ஆனால் விசுவாசத்தை மட்டும் விட்டுவிடாமல்
தொடர்ந்து  அதற்காக விசுவாசத்தோடு  ஜெபித்து  கொண்டிருந்தால்  போதும்  ஏற்றவேளையில் கர்த்தர் வாய்க்க செய்வார். அன்னாளுக்கு அழகான ஆண் குழந்தையை கொடுத்த கடவுள் நம்மையும் நிறைவாய் ஆசீர்வதிப்பார். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

1 comment:

  1. today's devotion really touched my heart

    by maruthi

    ReplyDelete

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews