WORD OF GOD

WORD OF GOD

Friday, February 18, 2011

காலை மன்னா

இன்றைய தியானத்தை நமக்கு வழங்குபவர் எனது அன்பிற்குரிய அண்ணனும் போதகருமான அருள்திரு. பால் தியோடர் அவர்கள். இவர் நாகர்கோவிலில் போதகராக பணியாற்றி வருகிறார்.

இன்றைய தியான வசனம், யாக்கோபு.3 :13 -18 

13. உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.

14. உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.

15. இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.

16. வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.

17. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

18. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது



இன்று உலகில் அறிஞர்கள், பேரறிஞர்கள் பெருகிக்கொண்டே வருகிறார்கள், ஆனால் ஞானிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது

பல்வேறு வழிகளிலும், விஞ்ஞான ரீதியாகவும் அறிவை வளர்த்துக்கொள்ள மனிதன் விரும்புகிறானே தவிர ஞானத்தை பெற்றுகொள்ள விரும்புகிறதில்லை.

வேதாகமத்தில் ஞானத்துக்கு புகழ் பெற்றவனாக சாலமன் ராஜா சொல்லப்படுகிறார், தான் கடவுளிடம் ஞானம் வேண்டு என்று கேட்டதோடு, அனைத்து மக்களையும், ஞானத்தை பெற்றுக்கொள்ள புத்தி கூறுகிறார்.

அவர் எழுதிய நீதிமொழிகள் புத்தகம் ஞான இலக்கியங்களில் ஒன்றாக விளங்குகிறது. 

புதிய ஏற்பாட்டில், அப்போஸ்தலனாகிய பவுலும், யாக்கோபும், தேவ ஞானத்தை குறித்து, தங்கள் நிரூபங்களில் எழுதி உள்ளதை பார்க்கிறோம்.

நம்முடைய தியானப் பகுதியில், இன்று அப்போஸ்தலனாகிய யாக்கோபு, பரத்தில்  இருந்து வருகிற தேவ ஞானத்தை ஞானத்தை குறித்து எழுதுகிறார்.

ஞானம் என்பது இன்றைய விஞ்ஞானத்தை குறித்த அறிவையோ, திறமையையோ குறிப்பிடுவது அல்ல, அது கடவுளிடம் இருந்து ஒரு நல்ல வாழ்வை, நல்ல நடக்கையை அறிந்துக் கொள்வதை குறிக்கும்.

தியானப்பகுதியில் இவ்வுலக ஞானத்தையும், பரத்திலிருந்து வருகிற ஞானத்தையும், யாக்கோபு எடுத்துரைக்கிறார். இவ்வுலக ஞானம் என்பது இந்த பூமிக்கு உரியதாகவும், ஆன்மீக தன்மை அற்றதாகவும், பொய் நிறைந்ததாகவும், காணப்படுகிறது.

பரத்தில் இருந்து வருகிற ஞானமோ, நீதியுள்ளதாகவும், மற்றவர்களை புரிந்து கொள்கிறவர்களாகவும், சமாதானத்தின் நிமித்தம் தன்னை அர்ப்பணிக்கும் தன்மை உடையதாகவும், இரக்கம் நிறைந்ததாகவும், இருக்கிறது.

இந்த ஞானத்தை தான் சாலமன் ஞானி பெற்றுக் கொண்டார்.

உலக ஞானம் நாம் வாழும் சமுதாயத்தில் கலகத்தையும், பொறாமையையும் பகையையும் வைத்துக்கொண்டு இருக்கிறது.

ஆனால் பரத்தில் இருந்து வருகிற தேவ ஞானம் சமாதானத்தையும், நல் நடக்கை அடங்கிய ஒரு நல் வாழ்வையும் கொண்டு வருகிறது.

இந்த ஞானமாக இயேசு கிறிஸ்து திகழ்கிறார்.

1கொரிந்தியர்.1:22 ல், யூதர்கள் அடையாளங்களை தேடுகிறார்கள் கிரேக்கர்கள் ஞானத்தை தேடுகிறார்கள், ஆகிலும் அவர் தேவ வல்லமையும் தேவ ஞானமும் உடைய கிறிஸ்துவாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

ஆகவே கிறிஸ்து நம்மோடு இருக்கும் வாழ்வே ஞானமுள்ள வாழ்வாகும்.

1  கொரிந்தியர். 1 : 31  ல் அவர் கடவுளால் நமக்கு ஞானமானார் என்று எழுதப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவாகிய ஞானத்தை பெற்றுக்கொண்டு வாழ்வதே நன்னடக்கையும், நற்குணங்களும் அமைந்த நல்வாழ்வு  ஆகும்.

இந்த ஞானத்தை பெற கடவுளுக்கு பயப்படுதல் தேவை என்பதை நீதிமொழிகள் புத்தகத்தில் அதிகமாய் வாசிக்கிறோம்.

இன்று நம் வாழ்வில் பரத்தில் இருந்து வருகிற ஞானம் பெற்றவர்கள் மிக குறைவாக இருக்கிறார்கள். படித்தவர்களால் சபைகளில் பிரச்சனைகள் தலைதூக்குவதை காண்கிறோம்.

யாக்கோபு 2:3 ல் வஸ்திரம் தரித்தவனை பார்த்து  நீர் வசதியாய் உட்காருமென்று சொல்லி, தரித்திரனிடமோ நீ அங்கே நில் என்கிறார்கள்,

படித்தவர்கள் தேவ ஞானத்தை பெற்று வாழ்தல் ஒரு முன் மாதிரியை ஏற்படுத்துமல்லவா?

திருச்சபையின் தலைவராம்   இயேசு கிறிஸ்து தேவ ஞானமாக இருந்து நம்மை வழி நடத்தி வருகிறார்.

எனவே அவருடைய பிள்ளைகளாகிய நாம்  தேவ ஞானமாகிய கிறிஸ்துவில் இந்த நாளை ஞானமாக துவங்க தூயாவியானவர் நம்மை வழி நடத்துவாராக ஆமென்

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. பால் தியோடர்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews